/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நான்காவது சுற்றில் அர்ஜுன்: உலக கோப்பை செஸ் தொடரில்
/
நான்காவது சுற்றில் அர்ஜுன்: உலக கோப்பை செஸ் தொடரில்
நான்காவது சுற்றில் அர்ஜுன்: உலக கோப்பை செஸ் தொடரில்
நான்காவது சுற்றில் அர்ஜுன்: உலக கோப்பை செஸ் தொடரில்
ADDED : நவ 08, 2025 10:55 PM

கோவா: உலக கோப்பை செஸ் தொடரின் 4வது சுற்றுக்கு இந்தியாவின் அர்ஜுன், பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா முன்னேறினர்.
கோவாவில், உலக கோப்பை செஸ் 11வது சீசன் நடக்கிறது. 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், அர்ஜுன், பிரக்ஞானந்தா உள்ளிட்ட 206 பங்கேற்கின்றனர். இதன் 3வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, உஸ்பெகிஸ்தானின் ஷம்சிதீன் வோகிடோவ் மோதினர். முதல் போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜுன், 2வது போட்டியை 'டிரா' செய்தார். முடிவில் அர்ஜுன் 1.5 - 0.5 என வெற்றி பெற்று, 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 3வது சுற்றில் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, பெல்ஜியத்தின் டேனியல் தர்தா மோதினர். இதில் ஹரிகிருஷ்ணா 1.5 - 0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்ற 3வது சுற்று போட்டிகளில் இந்தியாவின் பிரனவ் 1.5 - 0.5 என்ற கணக்கில் லிதுவேனியாவின் திதாசை வீழ்த்தினார். இந்தியாவின் பிரக்ஞானந்தா 1.5 - 0.5 ஆர்மேனியாவின் ராபர்ட் அராரதியை தோற்கடித்தார்.
இந்தியாவின் விதித் குஜ்ராத்தி, கார்த்திக் வெங்கடராமன், நாராயணன் லினா, தங்களது இரு போட்டிகளையும் 'டிரா' செய்ததால், 'டை பிரேக்கரில்' விளையாட உள்ளனர். மற்றொரு இந்திய வீரர் தீப்தயன் கோஷ் தோல்வியடைந்து வெளியேறினார்.
குகேஷ் அதிர்ச்சி: மற்றொரு 3வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், ஜெர்மனியின் பிரடெரிக் ஸ்வேன் மோதினர். முதல் போட்டியை 'டிரா' செய்த குகேஷ், 2வது போட்டியில் வீழ்ந்தார். முடிவில் குகேஷ் 0.5 - 1.5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

