/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெள்ளி வென்றார் அர்ஜுன்: உலக துப்பாக்கி சுடுதலில்
/
வெள்ளி வென்றார் அர்ஜுன்: உலக துப்பாக்கி சுடுதலில்
ADDED : ஏப் 20, 2025 11:18 PM

லிமா: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா வெள்ளி வென்றார்.
பெருவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ருத்ராங்க் ஷ் பாலாசாகேப் பாட்டீல் (632.0 புள்ளி), அர்ஜுன் பாபுதா (631.9) முறையே 3, 4வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.
அடுத்து நடந்த பைனலில் அசத்திய அர்ஜுன், 252.3 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் ருத்ராங்க் ஷ் (104.8) 8வது இடம் பிடித்தார்.
ஆர்யா '5': பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஆர்யா போர்ஸ் 633.56 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார். மற்ற இந்திய வீராங்கனைகளான நர்மதா நிதின் ராஜு (627.6), சோனம் (623.5) முறையே 16, 30வது இடம் பிடித்தனர். அடுத்து நடந்த பைனலில் ஏமாற்றிய ஆர்யா, 188.1 புள்ளிகளுடன் 5வது இடம் பிடித்தார்.
இதுவரை 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. முதலிரண்டு இடங்களில் சீனா (3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம்), அமெரிக்கா (3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம்) உள்ளன.