/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தடகளத்தில் தடம் பதித்த ஆரோக்கிய ராஜிவ்
/
தடகளத்தில் தடம் பதித்த ஆரோக்கிய ராஜிவ்
ADDED : ஏப் 27, 2024 11:06 PM

இந்திய தடகள வீரர் ஆரோக்கிய ராஜிவ். கடந்த 2011ல் இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் படைப்பிரிவில் 8வது பட்டாலியனில் சுபேதராக சேர்ந்தார். துவக்கத்தில் நீளம் தாண்டுதலில் பங்கேற்றார். பின் 400 மீ., ஓட்டத்தில் கவனம் செலுத்தினார்.
புனேயில் 2013ல் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் 400 மீ., ஓட்டத்தின் பைனலில் (46.63 மீ.,) 6வது இடம் பிடித்தார். 2014ல் தென் கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டின் 400 மீ., ஓட்டத்தில் (45.92 மீ.,) வெண்கலம் கைப்பற்றினார். புவனேஸ்வரில் 2017ல் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்ற இவர், 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
கடந்த 2017ல் அர்ஜுனா விருது வென்றார். ரியோ (2016), டோக்கியோ (2020) ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில் பங்கேற்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இவர் இடம் பிடித்திருந்த இந்திய அணி பதக்கம் வெல்ல தவறியது. ஆனாலும், ஆசிய, தேசிய சாதனை (3 நிமிடம், 00:25 வினாடி) படைத்தது.
பகாமசில் நடக்கவுள்ள உலக தடகள தொடர் ஓட்டத்தில் (மே 4-5) பங்கேற்க சென்றுள்ள ஆரோக்கிய ராஜிவ் அடங்கிய இந்திய அணி சாதிக்கும் பட்சத்தில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம்.
பயோ-டேட்டா
பெயர்: ஆரோக்கிய ராஜிவ்
பிறந்த தேதி / இடம்
22-05-1991 / திருச்சி
விளையாட்டு
தடகளம், 400 மீ., ஓட்டம்
சிறந்த செயல்பாடு
45.37 மீ., (தோகா, 2019)
வென்ற பதக்கம்
ஆசிய விளையாட்டு: ஒரு வெண்கலம் (2014, 400 மீ.,), ஒரு தங்கம் (2018, கலப்பு 4*400 மீ.,), ஒரு வெள்ளி (2018, ஆண்கள் 4*400 மீ.,)
உலக ராணுவ விளையாட்டு: ஒரு வெள்ளி (2015, 400 மீ.,)
தெற்காசிய விளையாட்டு: இரண்டு தங்கம் (2016, 400 மீ., மற்றும் 4*400 மீ.,)
ஆசிய சாம்பியன்ஷிப்: ஒரு தங்கம் (2017, 4*400 மீ.,), ஒரு வெள்ளி (400 மீ.,)

