/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆர்சனல் அணி ஆதிக்கம்: பிரிமியர் லீக் கால்பந்தில்
/
ஆர்சனல் அணி ஆதிக்கம்: பிரிமியர் லீக் கால்பந்தில்
ADDED : பிப் 23, 2026 11:01 PM

லண்டன்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. லீக் போட்டியில் ஆர்சனல், டாட்டன்ஹாம் அணிகள் மோதின. இதில் ஆர்சனல் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 28 போட்டியில், 18 வெற்றி, 7 'டிரா', 3 தோல்வி என, 61 புள்ளிகளுடன் ஆர்சனல் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி (56 புள்ளி) உள்ளது.
பிரான்ஸ் பிரமாதம்
பாரிஸ்: ஆறு நாடுகளுக்கு இடையிலான ரக்பி சாம்பியன்ஷிப் 132வது சீசன் நடக்கிறது. பிரான்சில் நடந்த லீக் போட்டியில் பிரான்ஸ், இத்தாலி அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பிரான்ஸ் அணி 33-8 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே அயர்லாந்து, வேல்ஸ் அணிகளை வீழ்த்திய பிரான்ஸ் அணி, 'ஹாட்ரிக்' வெற்றியுடன் (15 புள்ளி) முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில் ஸ்காட்லாந்து (11), அயர்லாந்து (9) அணிகள் உள்ளன.
எக்ஸ்டிராஸ்
* ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் பகுதியில், 'கேலோ இந்தியா' குளிர்கால விளையாட்டு நேற்று துவங்கியது. நான்கு நாட்கள் நடக்கும் இப்போட்டியை, ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் துவக்கி வைத்தார். துவக்க விழாவில் முதல்வர் உமர் அப்துல்லா பங்கேற்றார்.
* வதோதராவில், ஆண்களுக்கான சீனியர் தேசிய கபடி சாம்பயன்ஷிப் 72வது சீசன் இன்று துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' சர்வீசஸ், ரயில்வேஸ், ஹரியானா உள்ளிட்ட 31 அணிகள் பங்கேற்கின்றன. பைனல், பிப். 27ல் நடக்கவுள்ளது.
* டில்லியில் நடக்கும் ஜூடோ தகுதிப்போட்டியில் அசத்திய குஜராத் வீரர் ரோகித் மஜ்குல், இந்த ஆண்டு நடக்கவுள்ள காமன்வெல்த் (ஜூலை 23-ஆக. 2), ஆசிய விளையாட்டு (செப். 19-அக். 4) போட்டிகளுக்கு தகுதி பெற்றார்.
* ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் இன்று நடக்கவுள்ள புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா, ஸ்பெயின் அணிகள் விளையாடுகின்றன. ஏற்கனவே ஸ்பெயினுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
* ஜெர்மன் ஓபன் பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் ஸ்ரீகாந்த், தன்வி சர்மா, கிரண் ஜார்ஜ், மாளவிகா பன்சோத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

