தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/அருந்ததி, பிரீத்திக்கு இடம்: ஒலிம்பிக் பதக்க திட்டத்தில்

அருந்ததி, பிரீத்திக்கு இடம்: ஒலிம்பிக் பதக்க திட்டத்தில்

அருந்ததி, பிரீத்திக்கு இடம்: ஒலிம்பிக் பதக்க திட்டத்தில்


ADDED : ஏப் 22, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 10:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஒலிம்பிக் பதக்க திட்டத்திற்கான முதன்மை பட்டியலில், இந்திய குத்துச்சண்டை நட்சத்திரங்களான சச்சின் சிவாச், பிரீத்தி பவார், அருந்ததி சவுத்ரி, பிரியா, சேர்க்கப்பட்டனர்.

மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், 'ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டம்' (டி.ஓ.பி.எஸ்.,) 2014ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், திறமையான விளையாட்டு நட்சத்திரங்களை கண்டறிந்து, அவர்கள் ஒலிம்பிக்/பாராலிம்பிக்கில் சாதிக்க தேவையான நிதி உதவி, சிறப்பு பயிற்சி வசதிகள் செய்து தரப்படும்.

சமீபத்தில் மங்கோலியாவில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு 5 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலம் என, 16 பதக்கம் கிடைத்தது. இதில் தங்கம் கைப்பற்றிய பிரீத்தி பவார் (54 கிலோ), பிரியா (60 கிலோ), அருந்ததி சவுத்தி (70 கிலோ) ஆகியோருடன் வெள்ளி வென்ற சச்சின் சிவாச் (60 கிலோ), ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்திற்கான முதன்மை பட்டியலுக்கு முன்னேறினர்.

இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆதித்யா (65 கிலோ), தீபக் (70 கிலோ), ஹர்ஷ் (90 கிலோ) ஆகியோர், டி.ஓ.பி.எஸ்., மேம்பாட்டு குழு பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us