/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பவர் லிப்டிங்': மாலிக் 'தங்கம்'
/
பவர் லிப்டிங்': மாலிக் 'தங்கம்'
ADDED : மே 11, 2024 11:40 PM

பட்டாயா: பாரா 'பவர் லிப்டிங்' உலக கோப்பையில் இந்திய வீரர் அசோக் தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
தாய்லாந்தின் பட்டாயா நகரில் பாரா 'பவர் லிப்டிங்' உலக கோப்பை போட்டி நடந்தது. பெண்களுக்கான 55 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் சகினா கதுன் களமிறங்கினார். காமன்வெல்த் விளையாட்டில் (2014) முதல் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சகினா, 'பெஸ்ட் லிப்ட்', 'டோட்டல் லிப்ட்' என இரு பிரிவில் 93 கிலோ துாக்கி, மூன்றாவது இடம் பிடிக்க, இரண்டு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
அடுத்து 98 கிலோ எடை துாக்க முயற்சித்தது தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.
ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அசோக் மாலிக், அதிகபட்சம் 197 கிலோ துாக்கி முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இந்தியாவின் மற்றொரு வீரர் பரம்ஜீத் சிங், 162 கிலோ எடை துாக்கி, வெள்ளிப்பதக்கம் வென்றார்.