UPDATED : பிப் 20, 2024 11:27 PM
ADDED : பிப் 20, 2024 10:37 PM

சிங்கப்பூர்: 'கிராண்ட்மாஸ்டர்' அந்தஸ்து பெற்ற வீரரை வீழ்த்திய இளம் வீரர் ஆனார் அஷ்வத் கவுஷிக்.
சுவிட்சர்லாந்தில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. சிங்கப்பூர் சார்பில் களமிறங்கினார் 8 வயது வீரர் அஷ்வத் கவுஷிக். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். 2017ல் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். ஆசிய யூத் சாம்பியன்ஷிப் தொடரில் கிளாசிக், ரேபிட், பிளிட்ஸ் பிரிவுகளில் 2022ல் சாம்பியன் ஆனார்.
உலகத் தரவரிசையில் 37,388 வது இடத்தில் உள்ள இவர், இம்முறை 37 வயது வீரர், போலந்தின் கிராண்ட்மாஸ்டர் ஜாசெக் ஸ்டோபாவை எதிர்கொண்டார். இதில் அஷ்வத் வெற்றி பெற்று அசத்தினார். இதையடுத்து 'கிளாசிக்' செஸ் பிரிவில் குறைந்த வயதில் 'கிராண்ட்மாஸ்டர்' அந்தஸ்து பெற்ற வீரரை வீழ்த்திய இளம் வீரர் ஆனார் அஷ்வத் கவுஷிக்.
முன்னதாக இவரை விட சில மாதங்கள் வயது மூத்த செர்பியாவின் லியோனிடு இவானோவிச், பல்கேரிய கிராண்ட்மாஸ்டர் மில்கோவை வீழ்த்தியது முதலிடத்தில் இருந்தது.

