sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

தயான் சந்த் சாதனைக்கு 'பாரத ரத்னா' எப்போது

/

தயான் சந்த் சாதனைக்கு 'பாரத ரத்னா' எப்போது

தயான் சந்த் சாதனைக்கு 'பாரத ரத்னா' எப்போது

தயான் சந்த் சாதனைக்கு 'பாரத ரத்னா' எப்போது


UPDATED : ஆக 29, 2025 10:49 PM

ADDED : ஆக 29, 2025 05:15 PM

Google News

UPDATED : ஆக 29, 2025 10:49 PM ADDED : ஆக 29, 2025 05:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தயான் சந்த் சாதனைக்கு அங்கீகாரமாக, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டுமென மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த். 1905, ஆக. 29ல் உ.பி.,யில் பிறந்தார். சிறந்த முன்கள வீரரான இவர், தனது மந்திர ஆட்டத்தால் 1928, 1932, 1936ல் இந்திய அணி தொடர்ந்து ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல கைகொடுத்தார். ஹாக்கி வரலாற்றில் அதிக கோல் (570, 185 போட்டியில்) அடித்து சாதனை படைத்தார். 'ஹாக்கி மந்திரவாதி' என போற்றப்பட்ட இவர், 74வது வயதில் (1979, டிச.3) காலமானார்.

இவரது பெயரில் இந்திய விளையாட்டின் உயர்ந்த 'தயான் சந்த் கேல் ரத்னா விருது' வழங்கப்படுகிறது. பிறந்தநாளான ஆக. 29, தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இவருக்கு 1956ல் 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது. நாட்டின் உயர்ந்த பாரத ரத்னா விருது (மறைவுக்கு பின்) வழங்கப்படாதது பெரும் குறையாக உள்ளது.

சச்சினுக்கு கவுரவம்: முன்பு பாரத ரத்னா விருதுக்கு விளையாட்டு நட்சத்திரங்கள் பரிசீலிக்கப்படவில்லை. கலை, இலக்கியம், அறிவியல், பொது வாழ்வில் செய்த சேவைக்காக வழங்கப்பட்டது. 2011ல் 'அனைத்து துறையை சார்ந்தவர்களும் தகுதியானவர்கள்' என திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி கிரிக்கெட் அரங்கில் நிகழ்த்திய சாதனைக்காக சச்சினுக்கு 2015ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

திலிப் டிர்கே முயற்சி: இதையடுத்து தயான் சந்த் பெயரையும் பரிந்துரை செய்ய வேண்டுமென, தற்போதைய 'ஹாக்கி இந்தியா' அமைப்பின் தலைவரும் முன்னாள் கேப்டனுமான திலிப் டிர்கே பல கட்ட முயற்சிகள் மேற்கொண்டார். 2016ல் பிஜு ஜனதா தள எம்.பி.,யாக இருந்த இவர், ராஜ்ய சபாவில் கோரிக்கை விடுத்தார். 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்று மனு அளித்தார். டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் அஜித் பால் சிங், ஜாபர் இக்பால், அஜய் பன்சால் உள்ளிட்ட முன்னாள் வீரர்களுடன் போராட்டம் நடத்தினார்.

கடந்த 2014ல் தயான் சந்த் பெயரை பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்திருப்பதாக அப்போதைய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, லோக்சபாவில் தெரிவித்தார். மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் கூட தயான் சந்த் உருவத்தை மணலில் வடிவமைத்து வலியுறுத்தினார். இதற்கு எல்லாம் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நரசிம்மராவ், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை பிரதமர் அத்வானி உட்பட பலருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தயான் சந்த் மட்டும் புறக்கணிக்கப்படுகிறார்.

தொடரும் புகழ்: தயான் சந்த் மகனும் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரருமான அசோக் குமார் கூறுகையில்,''என் தந்தை மறைந்து 46 ஆண்டுகளுக்கு பின்பும் அவரது புகழ் நிலைத்து நிற்கிறது. சுயமரியாதையுடன் வாழ்ந்தார். தனக்காக விருது கேட்க மாட்டார். குடும்ப சூழல் காரணமாக 1977-78ல் காஸ் ஏஜென்சிக்கு விண்ணப்பிக்க விரும்பினோம். அதில் கையெழுத்திட மறுத்துவிட்டார். தன் சேவையை அங்கீகரிக்க வேண்டியது அரசின் பணி என கருதினார். யாரிடமும் எதையும் கேட்டு பெற மாட்டோம்,''என்றார்.

அரசுக்கு கோரிக்கை: திலிப் டிர்கே கூறுகையில்,''ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் ஹாக்கியில் தான் கிடைத்தது. இதற்கு தயான் சந்த் முக்கிய காரணம். இவரது பெயரில் நாட்டின் உயர்ந்த விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. பல மைதானங்களுக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாரத ரத்னா மட்டும் ஏன் மறுக்கின்றனர்? இந்திய விளையாட்டுக்கு இவர் செய்த சேவைக்கு அங்கீகாரமாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென அனைத்து ஹாக்கி நட்சத்திரங்கள் சார்பில் அரசை கேட்டுக் கொள்கிறேன்,''என்றார்.






      Dinamalar
      Follow us