ADDED : அக் 01, 2025 10:01 PM

ஆமதாபாத்: ஆசிய 'அக்குவாட்டிக்' சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரோகித் பெனடிக்சன், வெள்ளி வென்றார்.
இந்தியாவின் ஆமதாபாத்தில் முதன் முறையாக ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் (11வது சீசன்) நடக்கிறது. இதில் நீச்சல், வாட்டர் போலோ, டைவிங், ஆர்டிஸ்ட் நீச்சல் என நான்கு பிரிவுகளில் போட்டி நடக்கின்றன.
ஆண்களுக்கான 50 மீ., பட்டர்பிளை பிரிவு பைனல் நடந்தது. இந்திய வீரர் ரோகித் பெனடிக்சன், 23.89 வினாடி நேரத்தில் வந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். 15 வினாடி குறைவான நேரத்தில், கஜகஸ்தானின் அடில்பெக் முசினிடம் (23.75) தங்கத்தை இழந்தார் ரோகித்.
இருப்பினும் ரோகித், புதிய தேசிய சாதனை படைத்தார். தமிழகத்தை சேர்ந்த இவர், முன்னதாக உலக பல்கலை., விளையாட்டில் 23.96 வினாடி நேரத்தில் வந்து இருந்தார்.
ஐந்தாவது பதக்கம்
ஆண்களுக்கான 100 மீ., பிரீஸ்டைல் பிரிவில் பைனல் நடந்தது. இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ்,, 49.96 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார். இத்தொடரில் ஸ்ரீஹரி வென்ற ஐந்தாவது பதக்கம் இது.
பெண்களுக்கான 100 மீ., பிரீஸ்டைல் போட்டியில் இந்தியாவின் தினிதி, ஷஷிதாரா பைனலுக்கு முன்னேறினர். இதில் 6, 8வது இடம் பிடித்து ஏமாற்றினர்.