தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்திய பெண்கள் 'தங்கம்' * ஆசிய பீச் கபடியில்

இந்திய பெண்கள் 'தங்கம்' * ஆசிய பீச் கபடியில்

இந்திய பெண்கள் 'தங்கம்' * ஆசிய பீச் கபடியில்


ADDED : ஏப் 27, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சான்யா: ஆசிய பீச் விளையாட்டு கபடியில் இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் கைப்பற்றியது.

சீனாவின் சான்யா நகரில், ஆசிய பீச் விளையாட்டு 6வது சீசன் நடக்கிறது. இதில் 45 நாடுகளில் இருந்து, 1790 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 4 போட்டிகளில், 18 வீரர், 13 வீராங்கனைகள் என, 33 பேர் பங்கேற்றுள்ளனர்.

பெண்களுக்கான கபடியில் 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, 2 லீக் போட்டியிலும் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் 50-31 என வங்கதேசத்தை வீழ்த்தியது.

நேற்று நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதல் பாதியில் 20-18 என இந்தியா முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் சிறப்பாக செயல்பட்டது இந்தியா (27-13). முடிவில் இந்திய அணி, 47-31 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றியது. ஆசிய பீச் கபடியில் இந்திய பெண்கள் அணி, தொடர்ச்சியாக வென்ற 6வது தங்கம் இது.

ஆண்கள் 'வெள்ளி'

ஆண்களுக்கான கபடி அரையிறுதியில் இந்தியா 50-28 என பாகிஸ்தானை வென்றது.

நேற்று நடந்த பைனலில் இந்தியா, ஈரான் மோதின. முதல் பாதியில் இந்தியா 11-23 என பின்தங்கியது இந்தியா. இரண்டாவது பாதியில் இந்தியா (20-21) மீண்டு வந்த போதும் வெற்றிக்கு போதவில்லை. முடிவில் இந்தியா 31-44 என தோற்று, வெள்ளி கைப்பற்றியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us