sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

அஞ்சாத இந்தியாவுக்கு அஞ்சாவது கோப்பை * ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் அசத்தல்

/

அஞ்சாத இந்தியாவுக்கு அஞ்சாவது கோப்பை * ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் அசத்தல்

அஞ்சாத இந்தியாவுக்கு அஞ்சாவது கோப்பை * ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் அசத்தல்

அஞ்சாத இந்தியாவுக்கு அஞ்சாவது கோப்பை * ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் அசத்தல்


UPDATED : செப் 17, 2024 11:18 PM

ADDED : செப் 16, 2024 10:57 PM

Google News

UPDATED : செப் 17, 2024 11:18 PM ADDED : செப் 16, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹுலுன்பியுர்: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் அசத்திய இந்திய அணி நுாறு சதவீத வெற்றியுடன் கோப்பை வென்றது. சீனாவுக்கு எதிரான பைனலில் 1-0 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.

சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. 6 அணிகள் பங்கேற்றன. உலகத் தரவரிசையில் 5வது இடத்திலுள்ள 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி லீக் சுற்றில் பங்கேற்ற ஐந்து போட்டியிலும் வெற்றி பெற்றது. அரையிறுதியில் தென் கொரியாவை வீழ்த்தியது.

சீனாவுடன் மோதல்

நேற்று நடந்த பைனலில் இந்திய அணி, உலகின் 'நம்பர்-23' ஆக உள்ள சீனாவை சந்தித்தது.

உள்ளூர் ரசிகர்கள் பலத்தில் துவக்கத்தில் இருந்து சீன வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணியின் பல கோல் வாய்ப்புகளை தடுத்தனர். போட்டியின் 10 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அடித்த பந்து கோல் போஸ்டுக்கு வலது புறமாக விலகிச் சென்றது.

நழுவிய 'ஸ்டிரோக்'

27 வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்பிரீத் சிங்கை, சீன கோல் கீப்பர் வாங் வெய், முன்னோக்கி வந்து தள்ளினார். இதனால் இந்தியாவுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' தரப்பட்டது. இதை எதிர்த்து சீன அணி தரப்பில் 'அப்பீல்' செய்யப்பட்டது. முடிவில், வாங் வெய் முதலில் பந்தை தான் அடித்தார் என தெரிவிக்கப்பட்டு, 'ஸ்டிரோக்' வாய்ப்பு திரும்பப் பெறப்பட்டது.

ஜுக்ராஜ் கோ...ல்

இரண்டாவது பாதியில் சீன வீரர்கள் ஆக்ரோஷம் காட்டினர். அடுத்தடுத்து 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு பெற்றனர். இந்திய அணி கோல் கீப்பர் கிருஷன் பதக் சிறப்பாக செயல்பட்டு, சீன கோல் வாய்ப்பை தடுத்தார்.

போட்டியின் கடைசி 10 நிமிடத்தில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சீன ஏரியாவுக்குள் தாக்குதல் தொடுத்தனர். இம்முறை இதற்கு நல்ல பலன் கிடைத்தது. 51வது நிமிடத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கொடுத்த பந்தை பெற்ற ஜுக்ராஜ் சிங், அதே வேகத்தில் கோல் அடித்தார்.

'கோல்கீப்பர்' இல்லை

இதையடுத்து கோல் அடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த சீன அணிக்கு, கோல் கீப்பர் வாங் வெய் வெளியேற, கூடுதலாக ஒரு வீரர் களமிறங்கினார். கடைசி 4 நிமிடம் கோல் கீப்பர் இல்லாமல் விளையாடியது சீனா. இருப்பினும் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 1-0 என்ற வெற்றி பெற்று, 5வது முறையாக கோப்பை கைப்பற்றியது.

தொடரும் ஆதிக்கம்

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா நேற்று 5வது முறையாக (2011, 2016, 2018, 2023, 2024) கோப்பை வென்றது. ஒருமுறை (2012) 2வது இடம் பிடித்தது.

முதன் முறை

ஆசிய சாம்பியன்ஸ் தொடரில் சீன அணி முதன் முறையாக பைனலுக்கு முன்னேறியது. இதில் தோற்று, முதன் முறையாக இரண்டாவது இடம் பிடித்தது.

100 சதவீத வெற்றி

சீனாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் தொடர் முழுவதும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. லீக் சுற்றில் 5 போட்டியிலும் வெற்றி பெற்றது. அரையிறுதியில் தென் கொரியா, பைனலில் சீனா என பங்கேற்ற 7 போட்டியில் 100 சதவீத வெற்றியுடன் கோப்பை கைப்பற்றியது.

ரூ. 3 லட்சம் பரிசு

கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 3 லட்சம் தருவதாக இந்திய ஹாக்கி அமைப்பு அறிவித்துள்ளது. தவிர சக பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 1.5 லட்சம் தரப்பட உள்ளது.

சபாஷ் கிருஷன்

இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பராக இருந்த ஸ்ரீஜேஷ், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து கிருஷன் பதக் புதிய கோல் கீப்பராக தேர்வானார். ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இவரது முதல் தொடராக அமைந்தது. நேற்றைய பைனலில் சீன வீரர்களின் தாக்குதலை சிறப்பாக சமாளித்தார். அடுத்தடுத்து 3 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை தடுத்து இந்தியா கோப்பை வெல்ல கைகொடுத்தார்.

ஒலித்த தேசிய கீதம்

கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு ஹாக்கியில் இந்தியா சாம்பியன் ஆனது. இம்முறை இங்கு நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் அசத்திய இந்தியா கோப்பை வென்றது. வீரர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட, இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.



பாக்., மூன்றாவது இடம்

அரையிறுதியில் தோற்ற பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதின. இதில் பாகிஸ்தான் தரப்பில் சப்யான் (38, 49 வது நிமிடம்), ஹன்னன் (39, 54வது) தலா இரண்டு கோல் அடித்தனர். 45 வது நிமிடம் ரூமான் ஒரு கோல் அடித்தார். தென் கொரியா சார்பில் ஜங்ஜுன் (16வது), யாங் (40 வது) தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது இடம் பிடித்தது.






      Dinamalar
      Follow us