/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெண்கலம் வென்றார் ஆதர்ஷ் ராம்
/
வெண்கலம் வென்றார் ஆதர்ஷ் ராம்
ADDED : பிப் 06, 2026 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியான்ஜின்: ஆசிய உள்ளரங்கு தடகளத்தில் இந்தியாவின் ஆதர்ஷ் ராம், வெண்கலம் வென்றார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப், 12வது சீசன் நடக்கிறது. தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல், அபிநயா, ஆதர்ஷ் ராம் என 3 பேர் உட்பட, இந்தியா சார்பில் 17 பேர் பங்கேற்கின்றனர்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் ஆதர்ஷ் ராம், 2.19 மீ., உயரம் தாண்டி, வெண்கலப் பதக்கம் வென்றார். ஜப்பானின் செகோ யுடோ (2.23 மீ.,), ஷின்னோ டொமோஹிரோ (2.19 மீ.,) முதல் இரு இடம் பிடித்தனர்.
ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் இந்தியாவின் பிரவீன் சித்ரவேல், 16.22 மீ., தாண்டி, 4வது இடம் பிடிக்க, பதக்க வாய்ப்பு நழுவியது.

