தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆசிய வில்வித்தை: இந்தியாவுக்கு 9 பதக்கம்

ஆசிய வில்வித்தை: இந்தியாவுக்கு 9 பதக்கம்

ஆசிய வில்வித்தை: இந்தியாவுக்கு 9 பதக்கம்


ADDED : ஜூன் 20, 2025 11:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2025 11:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆசிய கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டி நடந்தது. ஆண்கள் அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் இந்தியா, கஜகஸ்தான் மோதின. குஷால், கணேஷ், மிஹிர் இடம் பெற்ற இந்திய அணி 231-235 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி வென்றது.

இந்தியா, மலேசியா அணிகள் மோதிய பெண்கள் அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவு பைனல் 232-232 என சமன் ஆனது. பின், 'ஷூட் ஆப்' முறையில் ஏமாற்றிய இந்தியா 26-29 என தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

கலப்பு அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் ஷண்முகி, தலால் அடங்கிய இந்திய அணி 78-77 என கஜகஸ்தானிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றது.

'ரிகர்வ்' அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு 2 வெள்ளி கிடைத்தது.

இத்தொடரில் இந்திய நட்சத்திரங்கள் 2 தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 9 பதக்கம் கைப்பற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us