/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய குத்துச்சண்டை: இந்தியா அபாரம்
/
ஆசிய குத்துச்சண்டை: இந்தியா அபாரம்
ADDED : ஏப் 21, 2025 10:07 PM

அம்மான்: ஆசிய குத்துச்சண்டை (15, 17 வயது) முதல் சுற்றில் இந்தியாவின் திகம் சிங், உதம் சிங், ராகுல் காரியா வெற்றி பெற்றனர்.
ஜோர்டானில், 15, 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகள் நடக்கின்றன. இதன் 52 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திகம் சிங், ஐக்கிய அரபு எமிரேட்சின் (யு.ஏ.இ.,) அலி அல்மெஸ்மாரி மோதினர். இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு போட்டியில் தங்கம் வென்ற திகம் சிங், துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினர். போட்டியை பாதியில் நிறுத்திய நடுவர், திகம் சிங் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
அடுத்து நடந்த 54 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உதம் சிங், ஈரானின் முகமதுபர்சா மோதினர். அபாரமாக ஆடிய உதம் சிங் 5-0 என வெற்றி பெற்றார்.
பின், 57 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராகுல் காரியா, சீனதைபேயின் லி ஷோ-சூன் மோதினர். இந்திய வீரரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சீனதைபே வீரர் திணறியதால், போட்டியை பாதியில் நிறுத்திய 'ரெப்ரி', ராகுல் காரியா வென்றதாக அறிவித்தார்.

