உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 30, 2026 10:42 PM

அ நிறம் | அளவு
உலான்பாடர்: ஆசிய குத்துச்சண்டை முதல் சுற்றில் இந்தியாவின் பிரீத்தி, தீபக் வெற்றி பெற்றனர்.
மங்கோலியாவில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரீத்தி பவார், கஜகஸ்தானின் எலினா பசரோவா மோதினர். இதில் பிரீத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்களுக்கான 70 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தீபக், உஸ்பெகிஸ்தானின் காவாஸ்பெக் அசதுல்லாயேவ் மோதினர். இதில் தீபக் 3-2 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றார்.
