/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய குத்துச்சண்டை: அரையிறுதியில் யஷ்வர்தன்
/
ஆசிய குத்துச்சண்டை: அரையிறுதியில் யஷ்வர்தன்
ADDED : மே 01, 2024 10:33 PM

அஸ்தானா: ஆசிய யூத் குத்துச்சண்டை அரையிறுதிக்கு இந்தியாவின் யஷ்வர்தன், ஆர்யன், பிரியான்ஷு, சாஹில் முன்னேறினர்.
கஜகஸ்தானில் ஆசிய யூத், 22 வயதுக்குட்பட்டோருக்கான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான யூத் 51 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஆர்யன், உஸ்பெகிஸ்தானின் ஜுரேவ் ஷகர்பாய் மோதினர். அபாரமாக ஆடிய ஆர்யன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்களுக்கான 63.5 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யஷ்வர்தன் சிங் 4-1 என ஈரானின் மிராஹ்மதி பாபஹீதாரியை வீழ்த்தினார். அடுத்து நடந்த 71 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரியான்ஷு, சீனதைபேயின் வு யு எனை வீழ்த்தினார். பின், 80 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாஹில், துருக்மெனிஸ்தானின் அப்டிரஹ்மாவை தோற்கடித்தார்.
இதன்மூலம் இந்தியாவக்கு மேலும் நான்கு பதக்கம் உறுதியானது.