/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய ஹேண்ட்பால்: சிங்கப்பூரை வென்றது இந்தியா
/
ஆசிய ஹேண்ட்பால்: சிங்கப்பூரை வென்றது இந்தியா
ADDED : டிச 08, 2024 09:46 PM

புதுடில்லி: ஆசிய ஹேண்ட்பால் 5-8வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி 35-22 என சிங்கப்பூர் அணியை வீழ்த்தியது.
டில்லியில், பெண்களுக்கான ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 20வது சீசன் நடக்கிறது. லீக் சுற்றில் இந்திய அணி 'பி' பிரிவில் 3வது இடம் பிடித்தது. இதில் 5-8வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, சிங்கப்பூர் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் இந்திய அணி 20-14 என முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து அசத்திய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 35-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் பிரியங்கா தாகூர், குல்ஷன் சர்மா, பாவனா தலா 6, ஷாலினி தாகூர் 5 புள்ளி பெற்றனர்.
மற்றொரு போட்டியில் சீன அணி 38-14 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது. 5வது இடத்துக்கான போட்டியில் (டிச. 10) இந்தியா, சீனா அணிகள் மோதுகின்றன.