/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய ஹாக்கி: இந்தியா கோல் மழை
/
ஆசிய ஹாக்கி: இந்தியா கோல் மழை
ADDED : டிச 08, 2024 10:59 PM

மஸ்கட்: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் கோல் மழை பொழிந்த இந்திய பெண்கள் அணி 13-1 என வங்கதேசத்தை வீழ்த்தியது.
ஓமனில், பெண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி 9வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, சீனா, ஜப்பான், இலங்கை உட்பட மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, முதல் பாதி முடிவில் 5-1 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் அசத்திய இந்திய வீராங்கனைகள் கோல் மழை பொழிந்தனர். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 13-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் மும்தாஜ் 4, தீபிகா, கனிகா தலா 3, மணிஷா, பியூட்டி, சாக்சி தலா ஒரு கோல் அடித்தனர். வங்கதேச அணிக்கு ஆர்பிதா பால் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.
இந்திய அணி, தனது 2வது லீக் போட்டியில் (டிச. 9) மலேசியாவை எதிர்கொள்கிறது.