/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய ஹாக்கி: இந்தியா வெற்றி
/
ஆசிய ஹாக்கி: இந்தியா வெற்றி
ADDED : செப் 08, 2024 11:38 PM

ஹுலுன்பியுர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. முதல் போட்டியில் சீனாவை வீழ்த்தியது.
சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, சீனா மோதின.
'அலர்ட்' கீப்பர்: பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 14வது நிமிடத்தில் ஜுக்ராஜ் துல்லியமாக பந்தை 'பாஸ்' செய்தார். இதை கச்சிதமாக பெற்ற சுக்ஜீத் சிங், முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்க சீன வீரர்கள் முயற்சித்தனர். ஆனால், இந்தியாவின் புதிய கோல்கீப்பர் கிருஷண் பதக் 'அலர்ட்' ஆக இருந்தார். எதிரணியின் வாய்ப்புகளை துடிப்பாக தடுத்தார்.
ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் சீனாவின் தற்காப்பு பகுதியை தகர்த்த உத்தம் சிங், 'சூப்பர்' கோல் அடித்தார். 32வது நிமிடத்தில் அபிஷேக் ஒரு கோல் அடிக்க, 3-0 என வலுவான முன்னிலை பெற்றது. கடைசி கட்டத்தில் சீன அணியினர் போராடிய போதும், பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில்,''முதல் போட்டியின் சிறப்பாக விளையாடினோம். புதுமுக வீரர்களும் திறமை வெளிப்படுத்தினர். ஒட்டுமொத்தமாக எங்களது ஆட்டம் திருப்தி அளித்தது,''என்றார்.
பாக்., அணி 'டிரா'
மலேசியா, ஜப்பான் மோதிய போட்டி 2-2 என 'டிரா' ஆனது. ஜப்பான், தென் கொரியா இடையிலான போட்டியில் கோல் மழையை காண முடிந்தது. இப்போட்டி 5-5 என 'டிரா' ஆனது.