தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆசிய ஹாக்கி: சாதிக்குமா இந்தியா

ஆசிய ஹாக்கி: சாதிக்குமா இந்தியா

ஆசிய ஹாக்கி: சாதிக்குமா இந்தியா


ADDED : செப் 04, 2025 10:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2025 10:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாங்சோவ்: சீனாவின் ஹாங்சோவ் நகரில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் இன்று துவங்குகிறது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஜப்பான், மலேசியா உள்ளிட்ட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை 'ரவுண்டு-ராபின்' முறையில் மோதும். முடிவில் 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் பைனலில் (செப். 14) விளையாடும்.

'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் போட்டியில் இன்று தாய்லாந்தை சந்திக்கிறது. அதன்பின் ஜப்பான் (செப். 6), சிங்கப்பூர் (செப். 8) அணிகளை எதிர்கொள்கிறது. 'ஏ' பிரிவில் சீனா, சீனதைபே, மலேசியா, தென் கொரியா அணிகள் இடம் பெற்றுள்ளன.

சலிமா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. கோல்கீப்பர் சவிதா புனியா (கணுக்கால்), தீபிகா (தொடையின் பின்பகுதி) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் காயத்தால் விலகியது பின்னடைவு. கோல்கீப்பராக பிச்சு தேவி களமிறங்கலாம். நவ்னீத் கவுர், உதிதா, நேஹா, லால்ரெம்சியாமி உள்ளிட்ட சீனியர் வீராங்கனைகள் கைகொடுத்தால் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.

இதுவரை சாம்பியன்


பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கியில் தென் கொரியா (1985, 1994, 1999), ஜப்பான் (2007, 2013, 2022) அணிகள் அதிகபட்சமாக தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றன. இந்தியா (2004, 2017), சீனா (1989, 2009) தலா 2 முறை கோப்பையை கைப்பற்றின.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us