இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி * ஆசிய 'ரிலே' ஓட்டத்தில்...
இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி * ஆசிய 'ரிலே' ஓட்டத்தில்...
ADDED : மே 21, 2024 11:22 PM

பாங்காங்: ஆசிய ரிலே ஓட்டத்தில் இரண்டாவது இடம் பிடித்த இந்திய ஆண், பெண்கள் அணியினர் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றின.
தாய்லாந்தின் பாங்காங்கில் ஆசிய 'ரிலே' சாம்பியன்ஷிப் (4X400 மீ.,) நடந்தது. முதல் நாளில் இந்திய கலப்பு அணி தங்கம் வென்றது. நேற்று ஆண்களுக்கான ஓட்டம் நடந்தது. முகமது அனாஸ் தாஹியா, சந்தோஷ் குமார், மிஜோ சாக்கோ குரியன், ஆரோக்கிய ராஜிவ் இடம் பெற்ற இந்திய அணி 3 நிமிடம், 05.76 வினாடி நேரத்தில் ஓடி வந்து, இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.
3 நிமிடம், 04.48 வினாடி நேரத்தில் வந்த இலங்கை அணி, தங்கம் வசப்படுத்தியது.
பெண்களுக்கான 'ரிலே' ஓட்டத்தில் இந்தியா சார்பில் வித்யா ராம்ராஜ், ராஜு மச்சேத்திரா, பாருல் சவுத்ரி, பிராச்சி இடம் பெற்ற அணி பங்கேற்றது. பந்தய துாரத்தை 3 நிமிடம், 33.55 வினாடி நேரத்தில் கடந்து, இரண்டாவது இடம் பெற, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. வியட்நாம் அணி (3 நிமிடம், 30.81 வினாடி) முதலிடம் பெற, ஜப்பான் (3 நிமிடம், 35.45 வினாடி) மூன்றாவது இடம் பிடித்தது.
