/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய ஸ்குவாஷ்: இந்தியா அபாரம்
/
ஆசிய ஸ்குவாஷ்: இந்தியா அபாரம்
ADDED : ஜூன் 13, 2024 10:35 PM

டேலியன்: ஆசிய ஸ்குவாஷ் காலிறுதிக்கு இந்திய ஆண்கள் அணி முன்னேறியது.
சீனாவில், அணிகளுக்கு இடையிலான ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 'டி' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, மங்கோலியா அணிகள் மோதின. சுராஜ் குமார் சந்த், ஓம் செம்வால், ராகுல் பதியா கைகொடுக்க இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் குவைத்தை வீழ்த்திய இந்தியா, 5 புள்ளிகளுடன் 'டி' பிரிவில் 2வது இடம் பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது. இப்பிரிவில் உள்ள ஜப்பான் அணி (8 புள்ளி) 'ஹாட்ரிக்' வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியது. இதில் பாகிஸ்தானை இன்று சந்திக்கிறது.
பெண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. ராதிகா, பூஜா ஆர்த்தி, சுனிதா படேல் கைகொடுக்க இந்திய அணி 3-0 என வெற்றி பெற்றது. அடுத்து நடந்த போட்டியில் இந்திய அணி 0-3 என மலேசியாவிடம் வீழ்ந்தது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் இன்று தென் கொரியாவை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் அரையிறுதியில் விளையாடலாம்.