அனுராக், தீபான்ஷு 'தங்கம்' * ஆசிய தடகளத்தில் கலக்கல்
அனுராக், தீபான்ஷு 'தங்கம்' * ஆசிய தடகளத்தில் கலக்கல்
ADDED : ஏப் 25, 2024 10:45 PM

துபாய்: ஆசிய தடகளம் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தீபான்ஷு தங்கம் வென்றார்.
துபாயில் 21வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் (20 வயதுக்கு உட்பட்டோர்) நடக்கிறது. இதில் சிறப்பாக செயல்படுபவர்கள் வரும் ஆக. 27-31ல் பெருவில் நடக்க உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறலாம். இந்தியா சார்பில் 31 வீரர், 29 வீராங்கனை உட்பட 60 பேர் பங்கேற்கின்றனர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தீபான்ஷு சர்மா, 70.29 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இந்தியாவின் மற்றொரு வீரர் ரோகன் யாதவ், 70.03 மீ., துாரம் எறிந்து, வெள்ளி வென்றார்.
ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பிரியான்ஷு, 3 நிமிடம், 50.85 வினாடி நேரத்தில் வந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். பெண்கள் வட்டு எறிதலில் இந்தியாவின் அமனத் கம்போஜ், 50.45 மீ., துாரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார். பெண்கள் 10,000 மீ., ஓட்டத்தில் ஆர்த்தி, 47 நிமிடம், 45.33 வினாடி நேரத்தில் வந்து வெண்கலம் வென்றார். தவிர, உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கும் தகுதி பெற்றார்.
இரண்டு பதக்கம்
ஆண்கள் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் அனுராக் சிங் (19.23 மீ.,) சித்தார்த் சவுத்ரி (19.02 மீ.,) முதல் இரு இடம் பிடித்து தங்கம், வெள்ளி கைப்பற்றினர். 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் இந்திய வீராங்கனை நேத்மிகா மதுஷானி 13.01 மீ., நீளம் தாண்டி வெள்ளி வென்றார்.
