தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆசிய தடகளம்: அசத்துமா இந்தியா

ஆசிய தடகளம்: அசத்துமா இந்தியா

ஆசிய தடகளம்: அசத்துமா இந்தியா


ADDED : ஏப் 23, 2024 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 10:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் சித்தார்த் சவுத்ரி(குண்டு எறிதல்), லக்சிதா (1500 மீ., ஓட்டம்) உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் சாதிக்க காத்திருக்கின்றனர்.

துபாயில் 21வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் (20 வயதுக்கு உட்பட்டோர்) இன்று துவங்குகிறது. ஏப். 27ல் நிறைவு பெறுகிறது. இதில் இந்தியா சார்பில் 31 வீரர், 29 வீராங்கனை உட்பட 60 பேர் பங்கேற்கின்றனர். கடந்த முறை தென் கொரியாவில்(2023) நடந்த தொடரில் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களுடன், மூன்றாவது இடம் பிடித்தது. முதலிரண்டு இடங்களை ஜப்பான்(14+4+5= 23 பதக்கம்), சீனா(11+5+3=19) பெற்றன.

இம்முறை சிறப்பாக செயல்படுபவர்கள் வரும் ஆக. 27-31ல் பெருவில் நடக்க உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப்(20 வயதுக்கு உட்பட்டோர்) தொடருக்கு தகுதி பெறலாம்.

மீண்டும் தங்கம்

கடந்த முறை குண்டு எறிதலில் அசத்திய சித்தார்த் சவுத்ரி(19.52 மீ., துாரம்) தங்கம் வென்றார். இவர், தங்கத்தை தக்க வைக்கலாம். 1500 மீ., ஓட்டத்தில் நட்சத்திர வீராங்கனையான லக்சிதா (4:26.48 வினாடி, 2023), மீண்டும் தங்கம் கைப்பற்றலாம். தொடர் ஓட்டத்திலும் சாதிக்க வாய்ப்பு உள்ளது. திபன்ஷு சர்மா(ஈட்டி எறிதல்), குல்தீப் குமார்(போல் வால்ட்), ஷாருக் கான்(3,000 மீ., ஸ்டீபிள்சேஸ்), அனுஷ்கா யாதவ்(குண்டு எறிதல்), பிரதிக் ஷா யமுனா(நீளம் தாண்டுதல்), சுனிதா தேவி(5,000 மீ.,) மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்திய ஜூனியர் தடள குழுவின் பயிற்சியாளர் ரமேஷ் கூறுகையில்,''கடந்த ஆண்டு ஆண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தில் வெண்கலம், 4x400 தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கங்கள் கிடைத்தன. இவ்விரு ஓட்டத்திலும் இம்முறை நமது அணியினர் தங்கம் வெல்வர்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us