/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய மல்யுத்தம்: உதித் 'வெள்ளி'
/
ஆசிய மல்யுத்தம்: உதித் 'வெள்ளி'
ADDED : ஏப் 11, 2024 11:36 PM

பிஷ்கெக்: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் உதித் (57 கிலோ) வெள்ளி வென்றார்.
கிர்கிஸ்தானில் சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 57 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உதித் 10-8 என ஈரானின் இப்ராஹிம் மஹ்தி காரியை வீழ்த்தினார். காலிறுதியில் 6-4 என கிர்கிஸ்தானின் அல்மாஸ் ஸ்மான்பெகோவை வென்ற உதித், அரையிறுதியில் தென் கொரியாவின் கும் ஹியோக் கிம்மை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியில் உதித் 4-3 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
பைனலில் உதித், ஜப்பானின் கென்டோ யுமியா மோதினர். இதில் உதித் 4-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். தவிர இது, உதித் வென்ற 2வது சீனியர் பிரிவு பதக்கமானது.
மற்ற இந்திய வீரர்களான அபிமன்யு (70 கிலோ), விக்கி (97 கிலோ) வெண்கலம் கைப்பற்றினர். ரோகித் குமார் (65 கிலோ) வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

