/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய யூத் விளையாட்டு பளுதுாக்குதல்: வெள்ளி வென்றார் மகாராஜன்
/
ஆசிய யூத் விளையாட்டு பளுதுாக்குதல்: வெள்ளி வென்றார் மகாராஜன்
ஆசிய யூத் விளையாட்டு பளுதுாக்குதல்: வெள்ளி வென்றார் மகாராஜன்
ஆசிய யூத் விளையாட்டு பளுதுாக்குதல்: வெள்ளி வென்றார் மகாராஜன்
ADDED : அக் 27, 2025 10:31 PM

மனாமா: ஆசிய யூத் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவின் மகாராஜன் 2 வெள்ளி வென்றார்.
பஹ்ரைனின் மனாமா நகரில், ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 60 கிலோ பளுதுாக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் மகாராஜன் ஆறுமுகபாண்டியன் 16, பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 114, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 142 என, ஒட்டுமொத்தமாக 256 கிலோ பளுதுாக்கிய இவர், 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தவிர இவர், 'ஸ்னாட்ச்' பிரிவில் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
பெண்களுக்கான 'மெட்லே' தொடர் ஓட்டத்தின் பைனலில், எட்வினா ஜான்சன், தன்னு, ஷவுர்யா, பூமிகா அடங்கிய இந்திய அணி, இலக்கை 2 நிமிடம், 09.65 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. ஆண்களுக்கான 'மெட்லே' தொடர் ஓட்டத்தில் ஏமாற்றிய இந்திய அணி (ஒரு நிமிடம், 59.96 வினாடி) 5வது இடம் பிடித்தது.இதுவரை 3 தங்கம், 10 வெள்ளி, 11 வெண்கலம், என மொத்தம் 24 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (37 தங்கம், 24 வெள்ளி, 11 வெண்கலம்) நீடிக்கிறது.

