தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குத்துச்சண்டை: இந்தியா ஆதிக்கம்

குத்துச்சண்டை: இந்தியா ஆதிக்கம்

குத்துச்சண்டை: இந்தியா ஆதிக்கம்


UPDATED : மே 06, 2026 10:43 PM

ADDED : மே 05, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 10:43 PM ADDED : மே 05, 2026 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் 15, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. 17 வயது ஆண்கள், 54 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பால் நிவேஷ், 5:0 என கஜகஸ்தானின் அடிலெட்டை வென்றார்.

66 கிலோ பிரிவில் இந்தியாவின் ரன்வீர், 5:0 என, சீன தைபே வீரர் இங்-சியே செனை சாய்த்தார். 75 கிலோ முதல் சுற்றில் லக்சய் போகத், இலங்கையின் அராச்சிலாவை ஒரு மனதாக வீழ்த்தினார். மற்ற இந்திய வீரர்கள் ஹர்தீப் (63), ஹன்ரா ஜெய்தீப் (80) தங்களது முதல் சுற்று போட்டிகளில் தோற்று வெளியேறினர்.

15 வயது ஆண்களுக்கான 46 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மீட்டெய் ஓய்னா, 5:0 என கஜகஸ்தானின் அப்துரஹ்மானை வென்றார். முகமது யாசெர் (58), கிர்கிஸ்தானின் அக்பர்ஜானை, ஒரு மனதாக சாய்த்தார். இந்தியாவின் லில்மானி சிங் (61), இரண்டாவது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் அஜிஸ்பெக்கை சாய்த்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us