/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ரோலர் ஸ்கேட்டிங்: ஆனந்த் அபாரம்
/
ரோலர் ஸ்கேட்டிங்: ஆனந்த் அபாரம்
ADDED : ஜூலை 25, 2025 10:54 PM

ஜெசியான்: ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது பதக்கம் வென்றார் ஆனந்த் வேல்குமார்.
தென் கொரியாவில் 20வது ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 'சீனியர்' ஆண்களுக்கான 500 மீ ஸ்பிரின்ட் பைனலில் இந்தியாவின் ஆனந்த் வேல்குமார் (தமிழகம்), ஆர்யன்பால் பங்கேற்றனர். சிறப்பாக செயல்பட்ட ஆனந்த் தங்கம் வென்றார். ஆர்யன்பால் வெள்ளி கைப்பற்றினார்.
அடுத்து நடந்த 1000 மீ., ஸ்பிரின்ட் போட்டியில் ஆனந்த், ஒரு நிமிடம் 23.046 வினாடி நேரத்தில் வந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
ஜூனியர் பிரிவில் (500 மீ.,) இந்தியாவின் அனிருதன், ஜூனியர் பெண்கள் பிரிவில் ருத்வா என இருவரும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
பெண்களுக்கான 1000 மீ., ஸ்பிரின்ட் போட்டியில் இந்தியாவின் பாவ்யா (1 நிமிடம், 33.386 வினாடி) வெள்ளி வென்றார். ஷ்ரேயாசி, ஏற்கனவே 2 தங்கம் வென்றார். இத்தொடரில் இதுவரை இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் வென்றுள்ளது.