/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கபடி: இந்தியா இரண்டு தங்கம் * ஆசிய யூத் விளையாட்டில்...
/
கபடி: இந்தியா இரண்டு தங்கம் * ஆசிய யூத் விளையாட்டில்...
கபடி: இந்தியா இரண்டு தங்கம் * ஆசிய யூத் விளையாட்டில்...
கபடி: இந்தியா இரண்டு தங்கம் * ஆசிய யூத் விளையாட்டில்...
ADDED : அக் 23, 2025 10:54 PM

மனாமா: ஆசிய யூத் விளையாட்டு கபடியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் தங்கம் கைப்பற்றின.
பஹ்ரைனின் மனாமா நகரில் ஆசிய யூத் விளையாட்டு நடக்கிறது. 40 நாடுகளின் 8000க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான கபடி பைனலில் நேற்று இந்தியா, ஈரான் மோதின. முதல் பாதியில் இந்தியா 33-12 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 75-21 என வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றியது. யூத் ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இது.
ஆண்கள் அபாரம்
கபடியில் இந்திய ஆண்கள் அணி, பங்கேற்ற 5 போட்டியிலும் வென்று பைனலுக்கு முன்னேறியது. இதில் 35-32 என ஈரானை வென்று, தங்கம் கைப்பற்றியது.
ரஞ்சனா 'வெள்ளி'
பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ரஞ்சனா 24 நிமிடம், 25.88 வினாடி நேரத்தில் வந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார். ரியா நான்காவது இடம் பிடித்தார்.
* ஆண்களுக்கான 'டேக்வாண்டோ' தனிநபர் பூம்சே பிரிவில் இந்தியாவின் தேபாஷிஸ் தாஸ், அரையிறுதியில் 8.5100-8.5400 என சீனாவின் ஜிஜுவானிடம் தோற்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
* கலப்பு இரட்டையர் அரையிறுதியில், இந்தியாவின் யாஷ்வினி, ஷிவான்ஷு ஜோடி (8.1200-8.5600), தாய்லாந்தின் இன்ஜங், நிடிக்கான் ஜோடியிடம் தோற்க, இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது. இதுவரை இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 9 பதக்கம் வென்று, பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.