/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
முதல் தங்கம் வென்றார் குல்வீர் சிங் * ஆசிய தடகளத்தில்...
/
முதல் தங்கம் வென்றார் குல்வீர் சிங் * ஆசிய தடகளத்தில்...
முதல் தங்கம் வென்றார் குல்வீர் சிங் * ஆசிய தடகளத்தில்...
முதல் தங்கம் வென்றார் குல்வீர் சிங் * ஆசிய தடகளத்தில்...
ADDED : மே 27, 2025 11:10 PM

குமி: ஆசிய தடகளத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் தங்கம், செர்வின் வெண்கலம் வென்றனர்.
தென் கொரியாவில் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நேற்று துவங்கியது. 43 நாடுகளில் இருந்து 2000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியாவின் குல்வீர் சிங் 26, சிறப்பாக செயல்பட்டார்.
உ.பி.,யின் அலிகாரை சேர்ந்த இவர், 28 நிமிடம், 38.63 வினாடி நேரத்தில் வந்து ஆசிய சாம்பியன்ஷிப்பில் முதன் முறையாக தங்கம் வென்றார். இதையடுத்து உலக தடகள சாம்பியன்ஷிப்பில் (டோக்கியோ, செப். 13-21) பங்கேற்க தகுதி பெற்றார்.
ஜப்பானின் சுசுகி (28:43.84), பஹ்ரைனின் ஆல்பர்ட் ராப் (28:46.82) அடுத்த இரு இடம் பிடித்தனர். இந்தியாவின் சவான் பார்வல் (28:50.53) 4வது இடம் பெற்றார்.
செர்வின் அபாரம்
ஆண்களுக்கான 20 கி.மீ., நடை பந்தயம் நடந்தது. இந்தியாவின் செர்வின் செபாஸ்டியன், ஒரு மணி நேரம், 21 நிமிடம், 13.60 வினாடி நேரத்தில் வநது, வெண்கலம் கைப்பற்றினார்.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்தியாவின் அன்னு ராணி, அதிகபட்சம் 58.30 மீ., துாரம் மட்டும் எறிய, 4வது இடம் தான் கிடைத்தது. சு லிங்டன் (சீனா, 63.29 மீ.,), மோமோன் (ஜப்பான், 59.39), டகேமோட்டோ (ஜப்பான் 58.94) முதல் 3 இடம் பிடித்தனர்.
பைனலில் விஷால்
ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் அரையிறுதியில் அசத்திய இந்தியாவின் விஷால் தென்னரசு (46.05 வினாடி) பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு வீரர் ஜெய் குமார் (46.87) முதல் அரையிறுதியில் 4 வது இடம் பிடித்து வெளியேறினார்.
பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் வித்யா (53.32), ரூபல் (53.00) வெற்றி பெற்றனர். உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சர்வேஷ் (2.10 மீ.,) பைனலுக்கு தகுதி பெற்றார்.
ஆண்களுக்கான டெகாத்லான் (10) போட்டி நடக்கிறது. நேற்று நடந்த 100 மீ., குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 400 மீ., ஓட்டம் என 5 போட்டி முடிவில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர், 4205 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார்.
சபாஷ் செர்வின்
தமிழகத்தின் லால்குடியை சேர்ந்தவர் செர்வின் செபாஸ்டியன் 26. துவக்கத்தில் 10,000 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற இவர், பின் நடை பந்தயத்துக்கு மாறினார். கடந்த பிப்ரவரியில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். தற்போது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் முதன் முறையாக பதக்கம் (வெண்கலம்) வென்றுள்ளார்.