தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் * ஆசிய தடகளத்தில் கலக்கல்

ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் * ஆசிய தடகளத்தில் கலக்கல்

ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் * ஆசிய தடகளத்தில் கலக்கல்


ADDED : மே 29, 2025 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2025 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குமி: ஆசிய தடகளத்தில் ஒரே நாளில் இந்தியா, மூன்று தங்கம் கைப்பற்றியது. 2 வெள்ளி, 1 வெண்கலம் என நேற்று 6 பதக்கம் வென்றது.

தென் கொரியாவில் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் போட்டி நடந்தது. கடைசி நேரத்தில் முந்திய இந்தியாவின் அவினாஷ் சபிள், 8:20.92 நிமிடத்தில் வந்து தங்கம் கைப்பற்றினார். கடந்த 36 ஆண்டு (1975ல் ஹெர்பல் சிங், 1989ல் தினா ராம்) ஆசிய சாம்பியன்ஷிப் ஸ்டீபிள் சேஸில், இந்தியா வென்ற முதல் தங்கம் இது. தவிர அவினாஷ் 36, வென்ற இரண்டாவது பதக்கம் ஆனது. முன்னதாக 2019ல் வெள்ளி வென்றிருந்தார்.

ஜோதி கலக்கல்

பெண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தின் பைனல் நடந்தது. கடைசி 10 மீ., துாரத்தில் முந்திய இந்தியாவின் ஜோதி, 12.96 வினாடியில் வந்து தங்கம் கைப்பற்றினார். ஆசிய தடகளத்தில் இது புதிய சாதனை (முன்னதாக 1998ல் ஆக்லா ஷிஷிக்னா, 13.04, கஜகஸ்தான்) ஆனது.

தவிர தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜோதி தங்கம் (2023, 2025) கைப்பற்றினார்.

பெண்கள் அபாரம்

பெண்களுக்கான 4X400 மீ., தொடர் ஓட்ட ('ரிலே') பைனல் நடந்தது. இந்தியா சார்பில் துவக்கத்தில் ஜிஸ்னா, அடுத்து ரூபல், ரஜிதா ஓடினர். கடைசி சுற்றில் தமிழகத்தின் சுபா, மின்னல் வேகத்தில் ஓடி, இலங்கை, வியட்நாமை முந்தினார். முடிவில் 3:34.18 நிமிட நேரத்தில் வந்த இந்தியா தங்கம் கைப்பற்றியது. இத்தொடரில் ரூபல் வென்ற 3வது பதக்கம் (2 தங்கம், 1 வெள்ளி), சுபா வென்ற 2வது தங்கமாக அமைந்தது.

ஆண்கள் 'வெள்ளி'

ஆண்களுக்கான 4X400 மீ., தொடர் ஓட்டத்தின் பைனல் நடந்தது. முதலில் ஜெய் குமார், தரம்வீர், மானு ஓடினர். கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தின் விஷால் தென்னரசு, சீனாவை பின்தள்ளி, இந்தியா வெள்ளிப்பதக்கம் (3:03.73) கைப்பற்ற கைகொடுத்தார். இந்த சீசனில் இந்திய அணியின் சிறந்த ஓட்டமாக இது அமைந்தது.

ஆன்சி 'வெள்ளி'

பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஆன்சி (6.33 மீ.,), ஷைலி (6.30 மீ.,) இரண்டு, மூன்றாவது இடம் பெற, வெள்ளி, வெண்கலம் கிடைத்தன.

* பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டி முதல் நாளில் இந்தியாவின் நந்தினி அக்சரா (3610 புள்ளி) முதலிடத்தில் உள்ளார்.

* பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் சஞ்ஜிவனி (33:08.17 நிமிடம்), சீமா (33:08.23) 5, 6வது இடம் பிடித்தனர்.

* குண்டு எறிதலில் சமர்தீப் சிங் (19.25 மீ.,) 6வது, வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை சீமா (56.15 மீ.,) 4வது இடம் பெற்றனர்.

* உயரம் தாண்டுதலில் சர்வேஷ் (2.19 மீ.,) 5வது இடம் பெற்றார்.

14 பதக்கம்

ஆசிய தடகளத்தில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கம் வென்று, பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. தலா 21 பதக்கம் வென்ற சீனா 21 (12 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம்), ஜப்பான் (4 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம்) முதல், 3வது இடத்தில் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us