/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் ஹிமான்ஷு * ஆசிய ஈட்டி எறிதலில் அபாரம்
/
தங்கம் வென்றார் ஹிமான்ஷு * ஆசிய ஈட்டி எறிதலில் அபாரம்
தங்கம் வென்றார் ஹிமான்ஷு * ஆசிய ஈட்டி எறிதலில் அபாரம்
தங்கம் வென்றார் ஹிமான்ஷு * ஆசிய ஈட்டி எறிதலில் அபாரம்
ADDED : ஏப் 19, 2025 10:49 PM

தம்மம்: ஆசிய சாம்பியன்ஷிப் (18 வயது) ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஹிமான்ஷு தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
சவுதி அரேபியாவில் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 6வது சீசன் நடந்தது. ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இந்தியாவின் ஹிமான்சு, 67.57 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். 18 வயது ஆசிய சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்தியா கைப்பற்றிய முதல் தங்கம் இது.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் 2.03 மீ., தாவிய இந்தியாவின் தேவக் புசான், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். குவைத் வீரர் முகமது அல்டுவாஜி (2.05 மீ.,) தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான 'மெட்லே ரிலே' ஓட்டம் நடந்தது. இதன் படி முதல் வீரர் 100 மீ., அடுத்த வீரர் 200 மீ., 3வது வீரர் 300 மீ., கடைசி வீரர் 400 மீ., துாரம் (மொத்தம் 1000 மீ.,) ஓடுவர். இந்தியா சார்பில் சிராந்த், சையது சபீர், சாகேத் மின்ஜி, காதிர் கான் அடங்கிய அணி பங்கேற்றது. 1 நிமிடம், 52.15 வினாடி நேரத்தில் வந்து இரண்டாவது இடம் பிடிக்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
இந்திய பெண்கள் அணியினர், இரண்டாவது இடத்தில் 'பேடன்' மாற்றிய போது, கீழே தவற விட்டதால் போட்டியை முடிக்காமல் வெளியேறினர். இந்திய அணி 1 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கம் வென்றது.

