தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்தியாவுக்கு 'முதல்' பதக்கம் * ஆசிய 'யூத்' தடகளத்தில்...

இந்தியாவுக்கு 'முதல்' பதக்கம் * ஆசிய 'யூத்' தடகளத்தில்...

இந்தியாவுக்கு 'முதல்' பதக்கம் * ஆசிய 'யூத்' தடகளத்தில்...


ADDED : மே 28, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாங்காங்: ஆசிய யூத் தடகளத்தில் இந்தியாவின் நிபம், வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஹாங்காங்கில் 20 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நேற்று துவங்கியது. பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் நிபம் களமிறங்கினார். முதலில் நடந்த தகுதிச்சுற்றில் 11.82 வினாடி நேரத்தில் வந்த நிபம், முதலிடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறினார்.

அடுத்து நடந்த பைனலில் அசத்திய நிபம், 11.62 வினாடி நேரத்தில் வந்து மூன்றாவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

கடந்த 25 ஆண்டில், ஆசிய யூத் தடகளத்தில் பெண்கள் 100 மீ.,ல் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது. தவிர, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது.

கத்தாரின் தனா நுார் (11.47 வினாடி), சீனாவின் ஜின்ஜுவான் (11.54 வினாடி) தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றனர். ஆண்களுக்கான 3000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் விகாஷ் குமார், 8 நிமிடம், 24.88 வினாடியில் வந்து, 4வது இடம் பிடிக்க, பதக்க வாய்ப்பு நழுவியது. இது இவரது சிறந்த ஓட்டமாக அமைந்தது.

ஆண்களுக்கான 'ஹாம்மர் த்ரோ' போட்டியில் இந்தியாவின் அஷுவேந்திர பிரதாப் சிங் (64.34 மீ.,), அமன் (63.40 மீ.,) என இருவரும் 7, 8 வது இடம் பெற்று ஏமாற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us