இளம் இந்திய அணி 'தங்கம்' * ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...
இளம் இந்திய அணி 'தங்கம்' * ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...
ADDED : ஜூலை 09, 2026 11:29 PM

ஆர்டோஸ்: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் கலப்பு ரிலே ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் கைப்பற்றியது.
சீனாவில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் முதல் சீசன் நேற்று துவங்கியது. இதில் 4*400 மீ., கலப்பு ரிலே ஓட்டம் நடந்தது.
இந்தியா சார்பில் ஆசிக் பிரதான், சந்திரமோல், சேது மிஷ்ரா, ஷ்ரவானி அடங்கிய அணி பங்கேற்றது. பைனலில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 3 நிமிடம், 18.64 வினாடி நேரத்தில் வந்து, தங்கப்பதக்கம் கைப்பற்றியது. ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் பார்த்பிரீத் சிங், 52.91 மீ., துாரம் எறிய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள் சேஸ்' பந்தயத்தில் இந்தியாவின் பிராச்சி தேவ்கர், 10 நிமிடம், 32.69 வினாடி நேரத்தில் கடந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ஷிவாஜி பரசுராம் (14 நிமிடம், 08.19 வினாடி) வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தியாவின் மற்றொரு வீரர் வினோத் சிங் (14:23.67) வெண்கலம் கைப்பற்றினார்.
முதல் நாள் முடிவில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 6 பதக்கம் கைப்பற்றியது.
