தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தடகளம்: முரளி ஸ்ரீஷங்கர் அபாரம்

தடகளம்: முரளி ஸ்ரீஷங்கர் அபாரம்

தடகளம்: முரளி ஸ்ரீஷங்கர் அபாரம்


ADDED : ஏப் 29, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரிட்டோரியா: தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா நகரில், 'சிம்பைன் கிளாசிக்' தடகளம் நடந்தது. ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியா சார்பில் முரளி ஸ்ரீஷங்கர் பங்கேற்றார்.

கடந்த 2024ல் ஏற்பட்ட காயத்தால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகினார் முரளி ஸ்ரீஷங்கர். கடந்த ஆண்டு இதில் இருந்து மீண்ட இவர், ஜப்பானில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார்.

சமீபத்தில் பெங்களூருவில் நடந்த இந்தியன் ஓபன் தடகள சீரிசில், 8.15 மீ., துாரம் தாண்டி, முதலிடம் பிடித்து இருந்தார். இம்முறை பிரிட்டோரியாவில் சிறப்பாக செயல்பட்ட முரளி ஸ்ரீஷங்கர், 8.12 மீ., துாரம் தாண்ட, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். உலக தடகள கான்டினென்டல் தொடரில் அசத்திய தென் ஆப்ரிக்காவின் திவான் மானுயல் (8.07 மீ.,) இரண்டாவது இடம் பிடித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us