தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தேஜஸ்வின் சங்கர் 'தங்கம்' * உலக தடகள உயரம் தாண்டுதலில்...

தேஜஸ்வின் சங்கர் 'தங்கம்' * உலக தடகள உயரம் தாண்டுதலில்...

தேஜஸ்வின் சங்கர் 'தங்கம்' * உலக தடகள உயரம் தாண்டுதலில்...


ADDED : ஜன 31, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மன்ஹாட்டன்: உலக தடகள உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

அமெரிக்காவின் மன்ஹாட்டனில், உலக தடகளத்தின் சார்பில் 'டிலாஸ் டாட்ஸ் இன்விடேஷனல்' போட்டி நடந்தது. இதன் உயரம் தாண்டுதலில் இந்தியா சார்பில் தேஜஸ்வின் சங்கர் 27, பங்கேற்றார். 2.26 மீ., உயரம் தாண்டிய இவர், தங்கப்பதக்கம் வென்றார். இது, இத்தொடரில் சிறந்த செயல்பாடாக அமைந்தது.

இது 'பெஸ்ட்'

கடந்த 2023ல் பாஸ்டன் தடகளத்திற்குப் பின் (2.26 மீ.,), கடந்த மூன்று ஆண்டில் தேஜஸ்வினியின் சிறந்த செயல்பாடாக இது அமைந்தது. கடந்த 2018ல் தேசிய சாதனை (2.29 மீ.,) படைத்த தேஜஸ்வின், இம்முறை, தங்கம் வென்ற உற்சாகத்தில் 2.30 மீ., தாண்ட முயற்சித்தார். மூன்று வாய்ப்பிலும் ஏமாற்றினார்.

பாரிஸ் ஒலிம்பிக் (2024), உலக உள்ளரங்க தடகளத்தில் (2025) வெள்ளி வென்ற அமெரிக்காவின் ஷெல்பை மெக்ஈவென், 2.22 மீ., மட்டும் உயரம் தாண்டி, மீண்டும் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். அமெரிக்காவின் டெவின் லவுடர்மில்க் (2.22 மீ.,) வெண்கலம் வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us