தேஜாஸ் ஷிர்சே தேசிய சாதனை * இந்தியன் தடகள தொடரில்...
தேஜாஸ் ஷிர்சே தேசிய சாதனை * இந்தியன் தடகள தொடரில்...
ADDED : ஜூன் 13, 2026 11:08 PM

லுாதியானா: இந்திய தடகள சீரிஸ் (தொடர்) ஓட்டத்தில் தேஜாஸ் ஷிர்சே, தேசிய சாதனை படைத்தார்.
இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் இந்தியன் தடகள சீரிஸ் நடத்தப்படுகிறது. இதன் 9வது தொடர் பஞ்சாப்பின் லுாதியானாவில் நேற்று துவங்கியது. ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டம் நடந்தது. ரிலையன்ஸ் அணி சார்பில் களமிறங்கிய 24 வயது வீரர் தேஜாஸ் ஷிர்சே, பங்கேற்றார். கடந்த மாதம் நடந்த பெடரேஷன் போட்டியில், இவர் 13.50 வினாடி நேரத்தில் வந்தார்.
இம்முறை சிறப்பாக செயல்பட்ட தேஜாஸ் ஷிர்சே, 13.27 வினாடியில் ஓடி, புதிய தேசிய சாதனை படைத்தார். தவிர, ஆசிய அளவில் இது 6வது சிறந்த செயல்பாடாக அமைந்தது.
முன்னதாக இவர் 2024ல் 13.41 வினாடி நேரத்தில் கடந்து இருந்தார். தவிர காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி பெறுவதற்கான நேரத்தை (13.39 வினாடி) விட, இது சிறந்தாக அமைந்தது.
பெண்களுக்கான குண்டு எறிதலில் மன்பிரீத் கவுர் தங்கம் வென்றார். 800 மீ., ஓட்டத்தில் சண்டிகர் வீராங்கனை ஹர்மிலன், 2 நிமிடம், 16.88 வினாடியில் வந்து, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார்.
ஆண்களுக்கான 10,000 மீ., நடை பந்தயத்தில் தமிழகத்தின் ஓம் பிரகாஷ் (47 நிமிடம், 47.99 வினாடி) நான்காவது இடம் பெற்று ஏமாற்றினார்.
