/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தமிழக நட்சத்திரங்கள் அசத்தல் * தேசிய ஜூனியர் தடகளத்தில்...
/
தமிழக நட்சத்திரங்கள் அசத்தல் * தேசிய ஜூனியர் தடகளத்தில்...
தமிழக நட்சத்திரங்கள் அசத்தல் * தேசிய ஜூனியர் தடகளத்தில்...
தமிழக நட்சத்திரங்கள் அசத்தல் * தேசிய ஜூனியர் தடகளத்தில்...
ADDED : அக் 14, 2025 10:46 PM

புவனேஸ்வர்: தேசிய ஜூனியர் தடகளத்தில் தமிழகத்தின் தான்யா, விஷ்ணு, யுவராஜ் தங்கப்பதக்கம் கைப்பற்றினர்.
தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், 40 வது சீசன், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்தது. இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், 2026ல் அமெரிக்காவில் நடக்கவுள்ள ஜூனியர் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதி பெறலாம்.
16 வயதுக்கு உட்டோருக்கான (பெண்கள்) நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் தான்யா, 4.23 மீ., தாண்டி தங்கம் வென்றார். இது ஜூனியர் அரங்கில் புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 2024ல் அனன்யா, 4.05 மீ., தாண்டியதே அதிகமாக இருந்தது.
தவிர, 2 முதல் 4 வரையிலான இடங்களை பெற்று திக் ஷா (4.11, ஹரியானா), அனாமிகா (4.08, கேரளா), கின்ஜல்பென் (4.07, குஜராத்) என மூவரும் தேசிய சாதனை படைத்தனர்.
16 வயது ஆண்கள் பிரிவு நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் அபிநாத் (4.94 மீ.,) புதிய தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார்.
400 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் விஷ்ணு (51.74 வினாடி), குருதீப் (52.02) என இருவரும் தங்கம், வெள்ளி கைப்பற்றினர். 4X400 மீ., கலப்பு தொடர் ஓட்டத்தில் (20 வயதுக்கு உட்பட்ட) தமிழகத்தின் ஸ்ரீநிவாஸ், சக்தி ஸ்ரீ, விஷ்ணு, அக்ஸ்லின் கூட்டணி (3:32.76 நிமிடம்) வெள்ளிப்பதக்கம் வென்றது.
20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தமிழகத்தின் யுவராஜ் (15.61 மீ.,) முதலிடம் பெற்ற தங்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் சுபா தர்ஷினி, 24.35 வினாடி நேரத்தில் வந்து, வெள்ளி வசப்படுத்தினார். மற்ற போட்டிகளில் தமிழகத்தின் பிரித்திகா (400 மீ., தடை ஓட்டம், 1:02.79 நிமிடம்), உவின் ஆனந்தன் (800 மீ., 1:50.60 நிமிடம்), அம்பிரியஷ் (உயரம் தாண்டுல், 1.96 மீ.,), வெண்கலப் பதக்கம் வென்றனர்.