தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தமிழகத்தின் செர்வின் 'தங்கம்' * தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...

தமிழகத்தின் செர்வின் 'தங்கம்' * தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...

தமிழகத்தின் செர்வின் 'தங்கம்' * தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...


ADDED : ஜூன் 25, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனேஸ்வர்: தேசிய தடகள சாம்பியன்ஷிப் பாதி மாரத்தான் போட்டியில் தமிழகத்தின் செர்வின் தங்கம் வென்றார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரின் கலிங்கா மைதானத்தில் மாநிலங்களுக்கு இடையிலான 65 வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 21.098 கி.மீ., நடை பந்தயம் (பாதி மாரத்தான்) நடந்தது. தமிழக வீரர் செர்வின், ஒரு மணி நேரம், 31:49.00 நிமிட நேரத்தில் வந்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் கவுதமி (2.04:17 நிமிடம்) தங்கம் வென்று, ஆசிய விளையாட்டுக்கு (செப். 19-அக். 4, ஜப்பான்) தகுதி பெற்றார்.

பெண்களுக்கான போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் பரனிகா, 4.20 மீ., உயரம் தாவி, வெள்ளிப்பதக்கம் பெற்றார். கர்நாடகாவின் சிந்துஸ்ரீ (4.25), மத்திய பிரதேசத்தின் நிதிகா (4.10) தங்கம், வெண்கலம் வென்றனர். இவர்கள் 4.10 மீ., துாரத்திற்கும் அதிகமாக தாவியதால், ஆசிய விளையாட்டுக்கு தகுதி பெற்றனர்.

200 மீ., ஓட்டத்தில் ஒடிஷா வீரர் அனிமேஷ் குஜுர் (20.74 வினாடி) தங்கம் வென்றார். பெண்களுக்கான குண்டு எறிதலில் தமிழகத்தின் கிருஷ்ணா ஜெயசங்கர் (16.96 மீ.,) வெள்ளி வென்றார். இதுவரை தமிழகம் 4 தங்கம், 4 வெள்ளி என 8 பதக்கம் வென்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us