தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/'பாரா' தடகளம்: இந்தியா பதக்க மழை

'பாரா' தடகளம்: இந்தியா பதக்க மழை

'பாரா' தடகளம்: இந்தியா பதக்க மழை


ADDED : மார் 12, 2026 10:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பாரா தடகள போட்டியின் இந்தியா 54 தங்கம் உட்பட 164 பதக்கம் கைப்பற்றியது.

டில்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள கிராண்ட் பிரீ போட்டி நடக்கிறது. ரஷ்யா, எகிப்து, போஸ்னியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 257 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆண்களுக்கான 100 மீ., வீல் சேர் ரேசிங் ('டி 53', 'டி 54') பிரிவு பைனல் நடந்தது. இந்தியாவின் ரமேஷ் சண்முகம், 15.85 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

ஆண்களுக்கான 1500 மீ., வீல் சேர் ரேசிங் ('டி 53', 'டி 54') பிரிவு பைனலில் அசத்திய ரமேஷ் சண்முகம், 3 நிமிடம், 21.55 வினாடி நேரத்தில் வந்து தங்கம் கைப்பற்றினார். தமிழகத்தை சேர்ந்த ரமேஷ், கடந்த ஆண்டு நடந்த பாரா தடகள கிராண்ட் ப்ரீயில், 800 மீ., பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.

ஆண்களுக்கான 100 மீ., ('டி 42, 63') இந்தியாவின் சோலைராஜ் ஜெகனாதன் (17.75 வினாடி, தமிழகம்) தங்கம் கைப்பற்றினார்.

பிரீத்தி அபாரம்

பெண்களுக்கான 100 மீ., ஓட்டம் ('டி 35', 'டி 37') பைனல் நடந்தது. இந்தியாவின் பிரீத்தி பால், 14.46 வினாடியில் வந்து, தங்கம் வசப்படுத்தினார். ரஷ்யாவின் மார்கரிட்டா (16.25), கரினா (17.38) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.

ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் ('டி 44'), இந்தியாவின் பிரவீன் குமார் (1.94 மீ.,) தங்கம் வென்றார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் ('எப் 57') போட்டி நடந்தது. இந்தியா சார்பில் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரவீன் குமார், 44.09 மீ., துாரம் எறிந்து தங்கம் கைப்பற்றினார்.

பார்வைக் குறைபாடு உள்ள பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் ('டி 11, 12') ரஷ்யாவின் வலேரியாவுக்கு (14.83 வினாவி) தங்கம் கிடைத்தது.

1500 மீ., ஓட்டத்தில் ('டி 11, 12') இந்தியாவின் சவுமியா (5 நிமிடம், 19.94 வினாடி), ரக்சித்தா (5:28.30), ராதா (5:45.48) முதல் மூன்று இடம் பெற்று, பதக்கங்களை தட்டிச் சென்றனர்.

இந்தியா இது வரை 54 தங்கம் கைப்பற்றியது. மொத்தம் 164 பதக்கம் வென்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ரஷ்யா 15 தங்கம் உட்பட 25 பதக்கம் வென்று இரண்டாவதாக உள்ளது.



சுமித் அன்டில் அபாரம்

நேற்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. டோக்கியோ, பாரிஸ் என அடுத்தடுத்த பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் சுமித் அன்டில் (69.25 மீ.,) மீண்டும் தங்கம் கைப்பற்றினார்.

ஆண்கள் 400 மீ., ஓட்டத்தில் பவிக்குமார் (49.89 வினாடி), வீல்சேர் 400 மீ., போட்டியில் மனோஜ்குமார் சபாபதி (54.33), குண்டு எறிதலில் லட்சுமி (7.76 மீ.,) உள்ளிட்டோர் தங்கம் வென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us