தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சுமித் உலக சாதனை * பாரா தடகள சாம்பியன்ஷிப்பில்...

சுமித் உலக சாதனை * பாரா தடகள சாம்பியன்ஷிப்பில்...

சுமித் உலக சாதனை * பாரா தடகள சாம்பியன்ஷிப்பில்...


ADDED : மே 27, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பாரா ஈட்டி எறிதலில் புதிய உலக சாதனை படைத்தார் இந்தியாவின் சுமித் அன்டில்.

இந்தியன் ஓபன் பாரா தடகள சர்வதேச சாம்பியன்ஷிப் பெங்களூருவில் உள்ள கன்டீவ்ரா மைதானத்தில் நடக்கிறது. ஆண்கள் ஈட்டி எறிதலில் எப். 64 பிரிவில் களமிறங்கினார் இந்தியாவின் சுமித் அன்டில் பங்கேற்றார். பாராலிம்பிக்கில் 2 தங்கம், உலக சாம்பியன்ஷிப்பில் 3 தங்கம் வென்ற சுமித், இம்முறை 74.82 மீ., துாரம் எறிந்து புதிய உலக சாதனை படைத்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். முன்னதாக 2023 ஆசிய போட்டியில் இவர், 73.29 மீ., எறிந்ததே அதிகமாக இருந்தது.

ஆண்களுக்கான 400 மீ., 'டி 47' பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்றார் திலிப் கேவிட். பந்தய துாரத்தை இவர், 47.64 வினாடியில் வந்து புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். முன்னதாக 2025 உலக பாரா சாம்பியன்ஷிப்பில் இவர், 48.20 வினாடி நேரத்தில் வந்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us