தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்தியாவுக்கு நான்கு தங்கம் * உலக பாரா தடகளத்தில்...

இந்தியாவுக்கு நான்கு தங்கம் * உலக பாரா தடகளத்தில்...

இந்தியாவுக்கு நான்கு தங்கம் * உலக பாரா தடகளத்தில்...


ADDED : பிப் 13, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: துபாயில் உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 276 வீரர், 122 வீராங்கனைகள் என மொத்தம் 398 பேர் பங்கேற்கின்றனர்.

ஆண்களுக்கான 400 மீ., டி 46 பிரிவு ஓட்டத்தில் இந்தியாவின் திலிப் காவித், 49.15 வினாடி நேரத்தில் வந்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இத்தொடரில் இவர் வென்ற இரண்டாவது தங்கம் இது ஆனது. முன்னதாக 100 மீ., ஓட்டத்தில் திலிப், தங்கம் வென்றிருந்தார்.

ஆண்களுக்கான வட்டு எறிதல், வீல்சேர் பிரிவில் இந்தியாவின் சாஹில், 34.51 மீ., துாரம் எறிந்து, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். பெண்களுக்கான 200 மீ., 'டி12' பிரிவு ஓட்டத்தில் இந்தியாவின் தேஜல்பென், 25.47 வினாடி நேரத்தில் வந்து, முதலிடம் பிடித்தார். பெண்களுக்கான ஈட்டி எறிதல் எப். 46 பிரிவு ஈட்டி எறிதலில் இந்தியாவின் பாவனாபென், 33.97 மீ., துாரம் எறிந்து, தங்கம் கைப்பற்றினார்.

பெண்களுக்கான 100 மீ., ஓட்டம் டி 35/36 பிரிவு பைனலில் இந்தியாவின் பிரீத்தி பால், 14.32 வினாடி நேரத்தில் கடந்து, தங்கப்பதக்கம் வென்றார். பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் பவானி வலசங்கரி, வெள்ளி வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us