தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தடகளம்: பர்வேஸ் 'தங்கம்'

தடகளம்: பர்வேஸ் 'தங்கம்'

தடகளம்: பர்வேஸ் 'தங்கம்'


ADDED : மே 13, 2024 12:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2024 12:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புளோரிடா: அமெரிக்காவில் நடந்த சர்வதேச தடகள போட்டிக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பர்வேஸ் கான் தங்கம் வென்றார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் சர்வதேச தடகள போட்டி நடந்தது. இதில் ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்தியா சார்பில் சர்வேஸ் கான் பங்கேற்றார். இலக்கை 3 நிமிடம், 42.73 வினாடியில் கடந்த இவர், தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஹரியானாவை சேர்ந்த பர்வேஸ் 19, தகுதிச்சுற்றில் பந்தய துாரத்தை 3 நிமிடம், 44.98 வினாடியில் கடந்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இலக்கை 3 நிமிடம், 38.76 வினாடியில் அடைந்த இவர், தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்திருந்தார்.

ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 46.80 வினாடியில் கடந்த பர்வேஸ் 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us