/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியா ஆதிக்கம் தொடருமா * துவங்குகிறது தெற்காசிய சீனியர் தடகளம்
/
இந்தியா ஆதிக்கம் தொடருமா * துவங்குகிறது தெற்காசிய சீனியர் தடகளம்
இந்தியா ஆதிக்கம் தொடருமா * துவங்குகிறது தெற்காசிய சீனியர் தடகளம்
இந்தியா ஆதிக்கம் தொடருமா * துவங்குகிறது தெற்காசிய சீனியர் தடகளம்
ADDED : அக் 23, 2025 10:48 PM

ராஞ்சி: ஆறு நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் இன்று ராஞ்சியில் துவங்குகிறது.
தெற்காசிய கூட்டமைப்பு சார்பில் 'சீனியர்' தடகள சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. முதல் மூன்று சீசன் இந்தியா (1997, 2008), இலங்கையில் (1998) நடந்தன. 15 ஆண்டுக்குப் பின், நான்காவது சீசன் இன்று, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் துவங்குகிறது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூடான், மாலத்தீவு என 6 நாடுகளின் சார்பில் 206 பேர் பங்கேற்கின்றனர்.
மூன்று நாள் நடக்கும் இதில், 37 பிரிவுகளில் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இந்தியா சார்பில் அதிகபட்சம் 73 பேர் பங்கேற்கின்றனர்.
'சீனியர்' வீராங்கனை பூவம்மா (4*400 மீ.,) தவிர, ஜூனியர் நட்சத்திரங்கள் இந்தியா சார்பில் திறமை வெளிப்படுத்த உள்ளனர். அடுத்து இலங்கை சார்பில் 63, நேபாளத்தின் 27, வங்கதேசத்தின் 20, மாலத்தீவின் 15 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.
கடந்த 2008ல் இந்தியா 57 பதக்கம் (24 தங்கம், 19 வெள்ளி, 14 வெண்கலம்) வென்றது. இம்முறையும் தனது ஆதிக்கத்தை தொடரலாம்.