தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஜோரா ஈட்டி எறிவாரா நீரஜ் சோப்ரா... * உலக தடகளத்தில் தங்கம் வெல்வாரா

ஜோரா ஈட்டி எறிவாரா நீரஜ் சோப்ரா... * உலக தடகளத்தில் தங்கம் வெல்வாரா

ஜோரா ஈட்டி எறிவாரா நீரஜ் சோப்ரா... * உலக தடகளத்தில் தங்கம் வெல்வாரா


ADDED : செப் 12, 2025 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2025 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் இன்று டோக்கியோவில் துவங்குகிறது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா மீண்டும் தங்கம் வெல்ல காத்திருக்கிறார்.

உலக தடகள அமைப்பு சார்பில் 1983 முதல், இரு ஆண்டுக்கு ஒருமுறை உலக தடகள சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 20வது சீசன் இன்று ஜப்பானின், டோக்கியோ தேசிய மைதானத்தில் துவங்குகிறது.

உலகின் 198 நாடுகளில் இருந்து 2202 வீரர், வீராங்கனைகள்காத்திருக்கின்றனர். 49 போட்டிகளில் 149 பதக்கம் வழங்கப்பட உள்ளன. இந்தியா சார்பில் இம்முறை 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் களமிறங்குகின்றனர்.

நீரஜ் நம்பிக்கை

இதில் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா மீது மட்டும் தான் நம்பிக்கை காணப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பின் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை, கடந்த 2021ல் டோக்கியோ மண்ணில் வென்று தந்தார். மீண்டும் அதே மைதானத்தில் சாதிக்கலாம்.

கடந்த மாதம் 90 மீ.,க்கும் மேல் எறிந்த ஜாகுப் வாடில்ச் (செக் குடியரசு), லுாயிஸ் டா சில்வா (பிரேசில்), ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஜூலியஸ் எகோ (கென்யா) உள்ளிட்டோர் சவால் கொடுக்கலாம். இந்தியாவின் சச்சின் யாதவ், யாஷ்விர் சிங், ரோகித் யாதவும் பைனலுக்கு (செப். 18) முன்னேற வாய்ப்பு உண்டு.

வெல்வாரா அனிமேஷ்

உலக தடகளம் 200 மீ., ஓட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்தியர் அனிமேஷ் குஜுர். தேசிய சாதனையாளரான இவர், பைனலுக்கு முன்னேற முயற்சிக்கலாம். ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி (2017, 2019, 2022, 2023, 2025) 5வது முறையாக பங்கேற்கிறார். இரு முறை (2019, 2022) பைனலுக்கு முன்னேறினார்.

பாருல் சவுத்ரி (பெண்கள் 3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), காயத்தில் இருந்து மீண்ட முரளி ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), குல்வீர் சிங் (5000 மீ.,), தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் ('டிரிபிள் ஜம்ப்') உள்ளிட்டோர், பைனலுக்கு முன்னேறி நம்பிக்கை தர உள்ளனர்.

இரண்டாவது முறை...

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் செக் குடியரசின் ஜெலஸ்னி (1993, 1995), கிரனடாவின ஆண்டர்சன் பீட்டர்ஸ் (2019, 2021) என இருவர் மட்டும் அடுத்தடுத்து தங்கம் வென்றனர். இதுபோல நீரஜ் சோப்ரா, தொடர்ந்து இரண்டாவது முறையாக, தங்கத்தை தக்கவைப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us