தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மீண்டும் சாதிப்பாரா நீரஜ் சோப்ரா * உலக தடகள ஈட்டி எறிதலில்...

மீண்டும் சாதிப்பாரா நீரஜ் சோப்ரா * உலக தடகள ஈட்டி எறிதலில்...

மீண்டும் சாதிப்பாரா நீரஜ் சோப்ரா * உலக தடகள ஈட்டி எறிதலில்...


ADDED : செப் 16, 2025 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2025 10:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, இன்று பைனலுக்கு முன்னேற காத்திருக்கிறார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், உலக தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன் நடக்கிறது. உலகின் 198 நாடுகளில் இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் பங்கேற்றுள்ளனர்.

இதில் இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல், தகுதிச்சுற்று நடக்கிறது. இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா, பதக்கம் வெல்வார் என நம்பலாம்.

சுதந்திரத்திற்குப் பின் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை, கடந்த 2021ல் டோக்கியோ மண்ணில் வென்று தந்தார். மீண்டும் அதே மைதானத்தில் அசத்தி, இன்று பைனலுக்கு முன்னேற உள்ளார். இவருடன் இந்திய வீரர்கள் சச்சின் யாதவ், யாஷ்விர் சிங், ரோகித் யாதவும் 'ஏ' பிரிவில் களமிறங்குகின்றனர்.

கடந்த மாதம் 90 மீ.,க்கும் மேல் எறிந்த ஜாகுப் வாடில்ச் (செக் குடியரசு), லுாயிஸ் டா சில்வா (பிரேசில்), ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஜூலியஸ் எகோ (கென்யா) உள்ளிட்டோர் சவால் தர உள்ளனர்.

சர்வேஷ் 'ஆறு'

ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சர்வேஷ் அனில் குஷாரே பங்கேற்றார். இதன் தகுதிச்சுற்றில் 2.25 மீ., உயரம் தாண்டிய இவர், உலக சாம்பியன்ஷிப், உயரம் தாண்டுதலில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என சாதனை படைத்தார். நேற்று பைனல் நடந்தது. அதிகபட்சம் 2.28 மீ., உயரம் தாண்டிய சர்வேஷ், 6 வது இடம் பிடித்தார். இது இவரது சிறந்த செயல்பாடாக அமைந்தது. இதற்கு முன் 2022ல் 2.27 மீ., உயரம் தாண்டியதே அதிகமாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us