தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/நீரஜ் சோப்ரா ஏமாற்றம் * 'உலக' ஈட்டி எறிதலில்...

நீரஜ் சோப்ரா ஏமாற்றம் * 'உலக' ஈட்டி எறிதலில்...

நீரஜ் சோப்ரா ஏமாற்றம் * 'உலக' ஈட்டி எறிதலில்...


ADDED : செப் 18, 2025 05:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 05:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, 8 வது இடம் பிடித்தார். சச்சின் 4வது இடம் பெற்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், உலக தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனல் நடந்தது. இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற, நடப்பு உலக சாம்பியன் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் என இருவர் உட்பட மொத்தம் 12 பேர் பங்கேற்றனர்.

முதல் இரு வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 83.65, 84.03 மீ., துாரம் எறிந்தார். 3, 5வது வாய்ப்பில் பவுல் செய்த இவர், 4வது வாய்ப்பில் 82.86 மீ., துாரம் மட்டும் எறிந்தார். 'டாப்-6' பட்டியலில் இருந்தால் மட்டுமே கடைசி, 6வது வாய்ப்பு தரப்படும் என்பதால், நீரஜ் சோப்ரா (84.03) 8வது இடம் பிடித்து வெளியேறினார்.

சச்சின் நம்பிக்கை

மறுபக்கம் முதல் வாய்ப்பில் 86.27 மீ., துாரம் எறிந்த இந்தியாவின் சச்சின், நம்பிக்கை தந்தார். அடுத்து பவுல் செய்த சச்சின் 3, 4 வது வாய்ப்பில் 85.71, 84.90 மீ., கடைசி இரு வாய்ப்பில் 85.96, 80.95 மீ., துாரம் மட்டும் எறிந்தார். இருப்பினும் ஈட்டி எறிதலில் தனது சிறப்பான செயல்பாட்டை பதிவு செய்தார் சச்சின் (86.27 மீ.,). இதற்கு முன் இவர் 85.16 மீ., எறிந்ததே அதிகம்.

டிரினிடாட் அண்டு டுபாகோவின் கெஷ்ஹார்ன் வால்காட் (88.16 மீ.,), கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்சன் (87.38 மீ.,) அமெரிக்காவின் கர்டிஸ் தாம்ப்சன் (86.67 மீ.,) முதல் மூன்று இடம் பிடித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us