/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சிறந்த இந்திய வீராங்கனை யார் * மனு பாகர், அவனி, வினேஷ் போட்டி
/
சிறந்த இந்திய வீராங்கனை யார் * மனு பாகர், அவனி, வினேஷ் போட்டி
சிறந்த இந்திய வீராங்கனை யார் * மனு பாகர், அவனி, வினேஷ் போட்டி
சிறந்த இந்திய வீராங்கனை யார் * மனு பாகர், அவனி, வினேஷ் போட்டி
ADDED : ஜன 16, 2025 11:19 PM

புதுடில்லி: கடந்த ஆண்டின் சிறந்த இந்திய வீராங்கனை யார் என்பதை தேர்வு செய்ய பி.பி.சி., பட்டியல் வெளியிட்டது.
பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனம் (பி.பி.சி.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளையாட்டு நட்சத்திரங்களுக்கான விருது வழங்கப்படுகிறது. 2024ல் சிறந்த இந்திய வீராங்கனை யார் என்பதை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்துகிறது.
இதற்கான பரிந்துரை பட்டியலில் பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலம் வென்ற மனு பாகர், பாராலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற அவனி லெஹரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, கோல்ப் வீராங்கனை அதித்தி என ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.
தவிர, சிறந்த வளரும் வீராங்கனை, வாழ்நாள் சாதனையாளர், பாரா விளையாட்டின் சிறந்த வீராங்கனை விருதுகளும் வழங்கப்பட உள்ளன. இதற்கான இணையதள ஓட்டுப்பதிவு தற்போது துவங்கியுள்ளது. ஜன. 1 வரை உலகில் உள்ள ரசிகர்கள், தங்கள் விரும்பிய மொழியில் வாக்குகளை அளிக்கலாம். பிப். 17ல் வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளார்.