/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஏமாற்றினாரா லக்சயா சென் * விசாரணை தொடர கோர்ட் அனுமதி
/
ஏமாற்றினாரா லக்சயா சென் * விசாரணை தொடர கோர்ட் அனுமதி
ஏமாற்றினாரா லக்சயா சென் * விசாரணை தொடர கோர்ட் அனுமதி
ஏமாற்றினாரா லக்சயா சென் * விசாரணை தொடர கோர்ட் அனுமதி
ADDED : பிப் 25, 2025 10:53 PM

பெங்களூரு: லக்சயா சென் மீதான வயது மோசடி வழக்கை தொடர்ந்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.
இந்தியாவின் 'நம்பர்-1' பாட்மின்டன் வீரர் லக்சயா சென் 23. உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் (2021), ஆசிய விளையாட்டில் வெள்ளி (2022) வென்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்தார்.
கடந்த 2022ல் இவர் மீது, நாகராஜா என்பவர் புகார் தெரிவித்தார். இதன் படி, 1998ல் பிறந்த லக்சயா சென், 2001ல் பிறந்ததாக பிறப்பு சான்றிதழில் உள்ளது. 2010 ல் ஜூனியர் தொடரில் பங்கேற்றுள்ளார். இதனால் லக்சயா சென், சகோதரர் சிராக் சென் (பாட்மின்டன்), பெற்றோர், பயிற்சியாளர் விமல் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.
இதையடுத்து லக்சயா உள்ளிட்டோர் மீது, ஏமாற்றுதல், மோசடி செய்தல் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என லக்சயா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து விசாரித்த பெங்களூரு உயர்நீதி மன்றம்,' வயது மோசடி வழக்கில் விசாரணைக்கு உத்தரவிட போதுமான முதற்கட்ட ஆதாரங்கள் உள்ளன. இதனால் வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்,' என தெரிவித்துள்ளது.
முதன் முறையா
லக்சயா மீது, நாகராஜ் வழக்கு தொடர்வது முதன் முறையல்ல. 2018ல் இதுபோன்ற புகார் தெரிவித்தார். அப்போது லக்சயா, ஆகர்ஷி, துருவ் கபிலா என மூவரும் வயதை குறைத்து காட்டி போட்டிகளில் பங்கேற்பதாக, இணையதளம் செய்தி வெளியிட்டது. 2018ல் நடந்த சி.பி.ஐ., விசாரணையில் 1998ல் பிறந்த லக்சயா சகோதரர் சிராக் சென், 2005ல் பிறந்ததாக மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து 17 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் சிராக் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. தற்போது லக்சயா வழக்கு தொடர உள்ளது, அவருக்கு கூடுதல் சிக்கலை தந்துள்ளது.