sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

பாட்மின்டன்: மிதுன் அபாரம்

/

பாட்மின்டன்: மிதுன் அபாரம்

பாட்மின்டன்: மிதுன் அபாரம்

பாட்மின்டன்: மிதுன் அபாரம்


ADDED : ஜன 28, 2026 10:06 PM

Google News

ADDED : ஜன 28, 2026 10:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்காக்: தாய்லாந்து பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் தருண், மிதுன் வெற்றி பெற்றனர்.

தாய்லாந்தின் பாங்காக்கில் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், உலகத் தரவரிசையில் 61வது இடத்திலுள்ள இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத், 41வது இடத்திலுள்ள, இத்தொடரின் 'நம்பர்-8' வீரர் என அந்தஸ்து பெற்ற டென்மார்க்கின் மாக்னஸ் ஜோகன்னெசனை சந்தித்தார்.

முதல் செட்டை மிதுன் 21-12 என கைப்பற்றினார். அடுத்த செட்டை ஜோகன்னெசன் 21-9 என வசப்படுத்தி பதிலடி தந்தார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 3வது, கடைசி செட்டை மிதுன் 21-17 என வென்றார். 59 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் மிதுன் 21-12, 9-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் ('நம்பர்-43'), தாய்லாந்தின் கன்டபனை ('நம்பர்-55') எதிர்கொண்டார். இதில் தருண் 22-20, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், 21-15, 21-9 என மலேசியாவின் ஐய்டிலை வீழ்த்தினார்.

பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீயான்ஷி, 14-21, 21-13, 21-19 என கனடாவின் ஜங்கை வென்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப், 21-12, 21-12 என ஹாங்காங்கின் ஷின் யன்னை சாய்த்தார். இந்தியாவின் அனுபமா, 13-21, 20-22 என மலேசியாவின் பெங்கிடம் தோல்வியடைந்தார்.






      Dinamalar
      Follow us